• Sun. Dec 14th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சிவகங்கையில் மாரத்தான் போட்டி!…

By

Aug 13, 2021

நாட்டின் 75வது சுதந்திர தினம் கொண்டாட விருப்பதை முன்னிட்டு, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பங்கேற்ற மாரத்தான் போட்டி நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.

இந்தியா சுதந்திரம் அடைந்து 75வது சுதந்திர தினத்தை கொண்டாடப்படப்படவிருப்பதையொட்டி, இன்று சிவகங்கை மாவட்டம் கல்லலில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.


இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு நேரு யுவகேந்திரா துறையின் சார்பில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டி கல்லலில் இருந்து ,அரண்மனை சிறுவயல் வரையிலான 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடத்தப்பட்டது. இப்போட்டியில், மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி பங்கேற்று, போட்டியாளர்களுடன் 5 கிலோ மீட்டர் தூரமும் இடைவிடாமல் ஓடி,மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு உற்சாகம் ஊட்டினார்,பின்பு அரண்மனை சிறுவயலில் அமைந்துள்ள பாரம்பரிய மருதுபாண்டியர் கோட்டையின் முன்பு தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.


இந்நிகழ்ச்சியில், தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையான சிலம்பம் சுற்றும் போட்டி, பொய்க்கால் குதிரை நாட்டியம் ஆகியவை நடைபெற்றது.