உலகம் முழுவதையும் தனது கோர கரங்களால் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரானா நோய் தொற்றின் மூன்றாவது அலை தமிழகத்தில் வெகு சீக்கிரம் வரவிருப்பதாக மருத்துவ துறை வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர் .இந்த மூன்றாவது அலை பெரும்பாலும் குழந்தைகளை பாதிக்கும் என்று கருத்து நிலவுகிறது.
அதன் அடிப்படையில் கோரானா தாக்கத்தை எதிர் கொள்ளவும், முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், தமிழக அரசு சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில், 13 மருத்துவ வல்லுநர்களைக் கொண்ட பணி குழுவை அமைத்துள்ளது.
இதில்குழந்தைகள் நல இன்ஸ்டியூட் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை எக்மோர் இயக்குனர் , பணி இயக்குனர் தேசிய குழந்தைகள் பணி, திட்ட இயக்குனர் தமிழ்நாடு சுகாதாரத்துறை, மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு அரசு மருத்துவக் கழகம் எக்மோர் ,மருத்துவ கல்வி இயக்குனர் சென்னை, இயக்குனர் மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரம் சென்னை, இயக்குனர் பொது சுகாதாரம் நோய் தடுப்பு பிரிவு சென்னை, குழந்தைகள் நல தலைமை பிரிவு கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, தலைவர் குழந்தை நல அகாடமி குழந்தைகள் நலத்துறை ஸ்டான்லி மருத்துவமனை சென்னை,குழந்தைகள் மருத்துவ அகாடமி திருச்சி மாவட்ட பிரிவு ஆகிய 13 வல்லுனர்களை கொண்ட பணிக் குழுவை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த குழுவினர் கரானா நோய்த்தொற்றின் மூன்றாவது அலையை தடுக்கும் வகையில் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது ,குழந்தைகள் பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது ,அவர்களுக்கான சிகிச்சைகளை மேற்கொள்வது, இது குறித்த புள்ளி விவரங்களை தினசரி அரசுக்கு தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்வார்கள் என்று அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் முழுவீச்சில் தமிழக அரசு தமிழகம் முழுவதிலும் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் ,அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் ,அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து மருத்துவ துறை சார்ந்த மருத்துவர்கள் ,துறைசார்ந்த அலுவலர்களை முடுக்கிவிட்டு மூன்றாம் அலையை எதிர்கொள்ள தயாராக இருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது.