• Fri. Jan 17th, 2025

கையும் களவுமாக சிக்கிய திருட்டு கும்பல்.. காத்திருந்த அதிர்ச்சி!…

By

Aug 17, 2021

சென்னையை அடுத்து அம்பத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த இரு சக்கர வாகனங்களை திருடிச்செல்லும் கொள்ளையர்களை போலீசார் கைது செய்து விசாரித்ததில் பல திடுக்கிடும் உண்மைக் சிக்கின.

சில மர்மநபர்கள் அம்பத்தூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விலை உயர்ந்த வண்டிகளை திருடிச் செல்வதாக போலீஸாருக்கு அடிக்கடி புகார்கள் வந்தனர். இக்கொள்ளையர்களை பிடிக்கும் விதமான தனிப்படை அமைக்கப்பட்ட போலீஸார் அம்பத்தூர் கல்லிக்குப்பம் சோதனைச் சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மூன்று நபர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் பைக் திருட்டுக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. பின்னர் அவர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் திருச்சி விரைந்த போலீஸார் 28 லட்சம் மதிப்புள்ள 14 வண்டிகளை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக இரண்டு நபர்களை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.