சிவகங்கை மாவட்டம் கீழடி ஏழாம் கட்ட அகழாய்வில் புகை பிடிக்கும் பைப் மற்றும் விலங்கின் உருவ பொம்மை கண்டெடுக்கப்பட்டுள்ளது. கீழடி 7ம் கட்ட அகழாய்வு பணிகள் கீழடி அகரம் கொந்தகை மணலார் உள்ளிட்ட 4 இடங்களில் நடந்து வருகிறது. அகரம் அகழாய்வு தளத்தில் 8 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. சிறிய பானைகள் பானை ஓடுகள் நத்தை கூடுகள் மண் படிவங்கள் தலை அலங்காரங்களுடன் கூடிய சுடுமண் பொம்மை ஆகியவை கண்டறியப்பட்டன. அகரத்தில் 6ம் கட்ட அகழாய்வில் 4 புகைப்பான் குழாயகள் கண்டெடுக்கப்படடன. 7ம் கட்ட அகழாய்வில் கிடைத்த புகைப்பான் கருவி வேலைபாடுகளுடன் கூடியது. நாளுக்கு நாள் கீழடி மற்றும் அகரம் பகுதிகளில் நடைபெறும் அகழாய்வில் பண்டை தமிழரின் அடையாளங்களாக ஆச்சரியமூட்டும் பொருட்கள் கிடைத்தவண்ணம் உள்ளன. இவை தமிழர்களின் தொன்மை வரலாற்றை பறைசாற்றுவதாக உள்ளது.