• Wed. Apr 24th, 2024

கிராமிய கலைஞர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் விழா!…

By

Aug 16, 2021

ஆண்டிப்பட்டி அருகே கிராமியக் கலைஞர்களுக்கு நிவாரணப் பொருட்கள் மற்றும் நலவாரிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள சித்தார்பட்டி கிராமத்தில் கலைத்தாயின் புதிய பாதை கிராமியக்கலை அறக்கட்டளை சார்பாக தேவராட்டம், தப்பாட்டம், பறையாட்டம் பல்வேறு கிராமியக் கலைகளை சேர்ந்த நலிந்த கலைஞர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலைத்தாயின் புதியபாதை அறக்கட்டளை நிறுவனர் தலைவர் பாடகர் முத்துப்பாண்டி, மதுரை திண்டியூர் ஊராட்சி மன்ற தலைவர் குரு சந்திரசேகரன் ஆகியோர் பங்கேற்று நிவாரண பொருட்களை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் கிராம கலைஞர்கள் ஏராளமனோர் பங்கு பெற்று நிவாரணப் பொருட்கள் மற்றும் நல வாரிய உறுப்பினர்கள் அட்டைகளைபெற்று பயன் அடைந்தனர். மேலும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. மேலும் தற்பொழுது தமிழக அரசு அறிவித்துள்ள பட்ஜெட்டில் கிராமியக் கலைகளுக்கு எந்த ஒரு சலுகையும் வழங்கப்படாதது வருத்தமளிப்பதாகவும், வருங்காலங்களில் கிராமிய கலைகளை ஊக்குவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *