இத்தகைய விபத்தில் கடலில் காணாது போனவர்கள் குறித்தான தேடுதல் ஏழு ஆண்டுகள் மேற்கொள்ளப்படும்.ஏழு ஆண்டுகள் முழுமையாக முடிவடைந்தபின் தான் காணது போன மீனவர்கள் மரணம் அடைந்து விட்டார்கள் என கருதி.அத்தகைய குடும்பங்களுக்கு மட்டுமே அரசின் இழப்பீட்டு தொகை வழங்கப்படுகிறது.
குடும்ப தலைவன் காணாது போகும் மீனவ குடும்பங்களுக்கு அவர்களின் தினசரி குடும்ப சிலவு உதவி தொகையாக தினசரி அரசு ரூ 200.00 கொடுக்க வேண்டும் என்ற அரசாணை இருந்தும் பத்தாண்டு அண்ணா தி மு க.,ஆட்சியில் இத்தகைய உதவி தொகை கொடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை தெரிவித்தார். குமரி மாவட்டம், குளச்சல் சட்ட மன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ஜெ.ஜெ.பிரின்ஸ்.
தமிழகத்தில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள தி மு க.,ஆட்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின். கடலில் காணாது போனவர்கள் குறித்து ஆறு மாதங்களில் காணாது போன மீனவர்கள் குறித்து எவ்விதமான தகவல் கிடைக்காது போனாலே, அத்தகைய குடும்பங்ள் அரசின் கடலில் காணாது போனவர்களுக்கான நிவாரணம் பெற தகுதி உடையவர்கள் என அறிவித்துள்ளார்.
குமரி மாவட்டத்தை சேர்ந்த ஐந்து குடும்பங்களில் கடலில் காணாது போனவர்கள் குறித்து ஏழு ஆண்டுகள் கடந்தும் இதுவரை பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள், குமரி ஆட்சியர் அரவிந்த்தை பார்த்து மனுகொடுத்துள்ளார்கள். ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் குறித்து மனு கொடுப்பதுடன், வரும் சட்டமன்ற கூட்டத்திலும், பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்கள் குறித்து பேசுவேன் என குளச்சல் சட்ட மன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஜெ.ஜெ.பிரின்ஸ் தெரிவித்தார்.