இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனியார் மயமாக்க ஒன்றிய பாஜக அரசு முயற்சிக்கிறது. ஆனால் இந்த துறையின் வளர்ச்சிக்காக உதவிய ஊழியர்கள் அதிகாரிகள் இன்றைக்கு எதிர்நிலையில் போராடி வருகிறார்கள்.
நேசனல் இன்சூரன்ஸ் யுனைடெட் இன்சூரன்ஸ் ஓரியண்டல் இன்சூரன்ஸ் நியு இண்டியா அசூரன்ஸ் போன்ற நான்கு நிறுவனங்களை தனியார் மயமாக்க தீவிரம் காட்டப்படுகிறது. தேர்தல் வாக்குறுதிகளாக இதனை செய்வதாக மோடியும் பாஜகவும் சொல்லியிருந்தால் அதற்கு எதிராக மக்கள் வாக்களித்திருப்பார்கள்.
ஆனால் நாட்டை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்வதாக கூறிய மோடி பொதுத்துறை நிறுவனங்களை விற்று வருகிறார். அப்பன் பாட்டன் சொத்துக்களை அழிக்கும் பேரனாக வந்துள்ளார். மோடி அரசின் இந்த முடிவுக்கு எதிராக இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
அது தொடர்பாக மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க திண்டுக்கல், தேனி மாவட்டச்செயலாளர் ஆர்.கௌதமன் பேசும் போது மோடி அரசு ஒரு பொதுத்துறை நிறுவனத்தை கூட உருவாக்கவில்லை. ஆனால் அவற்றை விற்கப் பார்க்கிறது என்கிறார். பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாப்பதற்காகத்தான் இந்த போராட்டம் என்றார் கௌதம்.