• Wed. Mar 19th, 2025

ஊட்டியில் வானிலை மற்றும் சீதோசன நிலை மோசமாக இருந்தது தரைவழி மார்க்கமாக ஊட்டியில் வானிலை மற்றும் சீதோசன நிலை மோசமாக இருந்ததால் தரைவழி மார்க்கமாக கார் மூலமாக கோவை நோக்கி ஜனாதிபதி வந்து கொண்டுள்ளார்.

Byadmin

Aug 6, 2021

வானிலை சரியில்லாத காரணத்தினால் கோவை வந்து டெல்லி செல்லும் ஜனாதிபதி. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள். கோவை. ஆகஸ்ட். 6- ஒரு வாரம் தமிழக சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று காலை ஊட்டியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக சூலூர் வந்து விமானப்படை தளத்தில் இருந்து தனி விமானம் மூலமாக டெல்லி செல்வதாக இருந்தது.

ஊட்டியில் வானிலை மற்றும் சீதோசன நிலை மோசமாக இருந்ததால் தரைவழி மார்க்கமாக கார் மூலமாக கோவை நோக்கி ஜனாதிபதி வந்து கொண்டுள்ளார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த 5 நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கடந்த 2-ஆம் தேதி சென்னை வந்தார். அன்று மாலை தமிழக சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவையொட்டி திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் திருவுருவப்படத்தை சட்டசபையில் துவக்கி வைத்து உரையாற்றினார்.

அதனை தொடர்ந்து அவர் சூலூர் விமானப்படைத் தளத்துக்கு வந்து அங்கு நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதனைத் தொடர்ந்து வெலிங்டன் பயிற்சி மையத்திற்கு சென்று தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று. இன்று காலை டெல்லி திரும்புவதாக இருந்தது.

இந்த நிலையில் ஊட்டி ராணுவ பயிற்சி மையமான வெலிங்டன் மைதானத்தில் ஹெலிகாப்டர் தயார் நிலையில் இருந்தது. வானிலை மற்றும் சீதோசன நிலை மோசமாக இருந்ததால் தரைவழி மார்க்கமாக அவர் கோவையை நோக்கி வந்து கொண்டு உள்ளார். அவர் சூலூரில் உள்ள விமானப்படைத் தளத்துக்கு வந்து அங்கிருந்து தனி விமானம் மூலமாக டெல்லி செல்ல உள்ளார்.

திடீரென அவர் சாலை மார்க்கமாக வருவதால் சூலூரில் இருந்து ஊட்டி வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை போலீஸ் அதிகாரியிடம் கேட்டபோது :- அவருடைய கார் மிகவும் மெதுவாகத்தான் கோவை நோக்கி வந்து கொண்டுள்ளது. அவர் எத்தனை மணிக்கு சூலூரை அடைகிறாரோ அதன் பிறகு அவர் சூலூர் விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லக்கூடிய நேரம் நமக்கு தெரியவரும் என குறிப்பிட்டார்.