முத்தமிழறிஞர், டாக்டர் கலைஞரின் 3ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 7.8.2021 தலைமைச் செயலகத்தில், ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ துறையால், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ் இ.ஆ.ப ஆகியோர் உடனிருந்தனர்.