• Thu. Feb 13th, 2025

இன்று முதல் மருத்துவக் கல்லூரிகளில் வகுப்புகள் தொடக்கம்!

By

Aug 16, 2021

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் இன்று முதல் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலை காரணமாக கடந்த ஓராண்டிற்கும் மேலாக ஆன்லைன் மூலமாக மட்டுமே கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. தற்போது தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் தாக்கம் குறைந்து வருவதை அடுத்து, தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன் படி கடந்த முறை தமிழக அரசு பிறப்பித்த தளர்வுகளின் படி, மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன.

சுமார் 5 மாதங்களுக்குப் பிறகு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் இன்று முதல் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக அனைத்து மாணவர்களும் கொரானா தடுப்பூசி போட்டுயிருக்க வேண்டும் அல்லது தடுப்பூசி போடாத மாணவர்கள் கொரானா பரிசோதனை செய்து இருக்க வேண்டும் போன்ற ஏற்பாடுகள் கல்லுரிகளில் செய்யப்பட்டு இருக்கிறது. கொரானா பரவல் சற்றே கட்டுக்குள் வந்துள்ள தன் காரணமாக, கட்டாயம் முக்ககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.