• Fri. Jun 14th, 2024

இனி விவசாயிகளுக்கு கவலையில்லை… வேளாண் பட்ஜெட்டில் இதை எல்லாம் கவனிச்சீங்களா?…

By

Aug 14, 2021

திமுக தலைமையிலான தமிழக அரசு சட்டப்பேரவையில் முதன் முறையாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் விவசாயிகளின் குறை தீர்க்கும் விதமாக பல்வேறு மாவட்டங்களில் தானிய சேமிப்பு நிலையங்கள், ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள், உழவர் சந்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்டுமானங்கள் குறித்த முக்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அதில் முக்கிய அம்சங்கள் இதோ…

 1. கரும்பு இளைஞர்கள் அறிந்து கொள்ளும் மரபுசார் வேளாண்மைக்கான வகையில், அருங்காட்சியகம்.
 2. சென்னையில்21, மண்வெட்டி, களைக்கொத்து, இரும்புச் சட்டி, கடப்பார. கதிர் அரிவாள் அடங்கிய “வேளாண் உபகரணங்கள் தொகுப்பு” அரை இலட்சம் விவசாயிகளுக்கு வழங்குவதற்காக ரூ.15 கோடி ஒதுக்கீடு. இயற்கை வேளாண்மை, ஏற்றுமதி, புதிய கண்டுபிடிப்புகளில் சிறந்துவிளங்கும் விவசாயிகளுக்கு மாநில அளவிலான பரிசு.
 3. திருவள்ளூர், கடலூர், நாமக்கல், தென்காசி மாவட்டங்களில் தோட்டக்கலை பயிர்களுக்கு சிறப்புக் கவனம் செலுத்த ரூ.12.50 கோடி கடலூர் மாவட்டத்தில் பலாவிற்கான சிறப்பு மையம் துவக்கம் கடலூர் மாவட்டம் வடலூரில் புதியதாக அரசு தோட்டக்கலை பூங்கா அமைக்க ரூ.1 கோடி ஒதுக்கீடு.
 4. 2007-08 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து 40 வேளாண் விளைபொருட்களுக்கு ஒரே சீராக உறுதி அறிவிக்கை.
 5. ஈரோடு, திருவண்ணாமலை. திருவாரூர். வேலூர். விழுப்புரம். தஞ்சாவூர், கடலூர், நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விளைபொருளை சேமிக்கவும், பரிவர்த்தனை செய்வதற்கான வசதிகள் செய்து தருவதற்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு.
 6. 5.ஒட்டன்சத்திரம், பண்ருட்டி ஆகிய இரண்டு இடங்களில் 10 கோடி ரூபாய் செலவில் குளிர்பதனக் கிடங்குகள்
 7. நாமக்கல் மாவட்டம் கொல்லி பகுதியில் பழங்குடி விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் மிளகினை பதப்படுத்தி சேமித்து வைக்க பரிவர்த்தனைக்கூடம், உலர்களத்துடன் பதப்படுத்தும் மையம் அமைக்க ரூ.50 இலட்சம் ஒதுக்கீடு.
 8. நீலகிரி, எடப்பள்ளி கிராமத்தில் ரூ2 கோடி மதிப்பில் ‘ஒருங்கிணைந்த கிராம வேளாண் சந்தை வளாகம்’ அமைக்கப்படும்
 9. கடலூர், விழுப்புரம், சேலம், நாமக்கல். கிருஷ்ணகிரி. ஈரோடு. திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை மதுரை, இராமநாதபுரம், தேனி,திண்டுக்கல், திருப்பூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ரூ.3.5 கோடி மதிப்பில் 28 உலர்கலங்கள் அமைக்கப்படும்
 10. விவசாயிகளுக்கு ஏற்றுமதி குறித்த விவரங்கள், விற்பனை வாய்ப்புகள், தரச் சான்றுகள் பெறும் முறைகள் போன்றவற்றை ஒருங்கிணைத்து வழங்கிட சென்னை, கிண்டியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் வேளாண் ஏற்றுமதி சேவை மையம்.
 11. முதன்முறையாக ஏற்றுமதியாளராகப் பதிவு செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் APEDA தரச்சான்று ஆய்வுக்கு 50 சதவிகித மானியம்
 12. ஈரோடு மாவட்டம் தானவாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் சேமிப்புக் கிடங்கு, பரிவர்த்தனைக்கூடம், கூட்டரங்குடன் கூடிய அலுவலகக் கட்டடம், மின்னணு எடை மேடை ஆகிய கட்டமைப்பு வசதிகள் அமைத்துத் தர 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
 13. முருங்கை அதிகளவில் விளையும் தேனி. திண்டுக்கல், கரூர் தூத்துக்குடி, அரியலூர், திருப்பூர். மதுரை மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகள் ‘முருங்கைக்கான ஏற்றுமதி மண்டலமாக’ அறிவிப்பு. மதுரையில் முருங்கைக்கென சிறப்பு ஏற்றுமதி சேவை மையம் அமைத்து, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்திட உலர்த்திகள் (Driers), இலைகளை பொடியாக்கும் இயந்திரங்கள் (Pulveriser), தானியங்கி சிப்பம் கட்டும் இயந்திரம் போன்ற கட்டமைப்பு வசதிகள் அமைத்துத் தர ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு.
 14. சென்னை மாநகராட்சியில் கொளத்தூர் பகுதியில் விளைபொருட்கள் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களுக்கான நவீன விற்பனை மையம் துவங்க ரூ.1 கோடி.
 15. மின்னணு ஏலம் மூலம் விவசாயிகள் தங்களின் விளைபொருளுக்கு உரிய விலை பெற இணையதளம் மற்றும் சிறப்பு மென்பொருளுக்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு.
 16. கொல்லிமலை மிளகு, பண்ருட்டி பலா, மண்ணச்ச நல்லூர் பொன்னி அரிசிக்கு புவிசார் குறியீடு பெற அரசு நடவடிக்கை
 17. கிருஷ்ணகிரியில் புதிதாக தோட்டக்கலைக் கல்லூரி தொடங்க முதற்கட்ட நிதியாக ரூ.10 கோடி ஒதுக்கீடு
  உணவுப்பதப்படுத்துதலுக்கு தனிக்கவனம் செலுத்தி முன்னேற்றுவதற்காக, உணவுப் பதப்படுத்துதலுக்கென தனி அமைப்பு.
   பதப்படுத்துதலுக்கு நாகப்பட்டினம், தேங்காய்க்கு கோயம்புத்தூர், வாழைக்கு திருச்சி, மஞ்சளுக்கு ஈரோடு, சிறு தானியங்களுக்கு விருதுநகர் என ஐந்து தொழில் காக்கும் மையங்கள் அமைக்க நடவடிக்கை.
   ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் மஞ்சள் பயிருக்கான ஆராய்ச்சி மையம் அமைக்க 2 கோடி ரூபாய் ஒடுக்கீடு.
 18. வேளாண்மை பட்டதாரிகள் மற்றும் இதர இளைஞர்கள் வேளாண்மை பணிகளில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் வகையில் ரூ.7.68 கோடியில்செயல்படுத்தப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சியும் அளிக்கப்படும்.
 19. தமிழ் வழி பயிலும் மாணவர்களில் வசதிக்காக தமிழில் வேளாண் மற்றும் தோட்டக்கலை கல்வி அறிமுகம் வேளாண்மையில், தொழில் முனைவோர்களை ஈர்க்க. வேளாண் தொழில் முனைப்பு மையம் (Agril incubation Centre) வலுப்படுத்தப்படுவதுடன் தேவையான இடங்களில் தொழில் முனைப்புமையம் (Agri incubation Centre).
 20. காவிரி டெல்டா வேளாண் பெருமக்கள் மற்றும் வேளாண் தொழிலாளர்களின் வாழ்வு வளமாக திருச்சி – நாகை மாவட்டங்களுக்கு இடையே பகுதியை வேளான் தொழிற்சாலைகளுக்கான பெருந்தடமாக அறிவிக்கை ஆகியன இடம் பெற்றுள்ளனர்.
 21. கோயம்புத்தூரில் உள்ள வளங்குன்றா வேளாண்மைக்கான துறை ‘நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம்’ என பெயர் மாற்றம் செய்து, நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மைக்கான ஆராய்ச்சி மையம் உருவாக்தி இயற்கை வேளாண்மை தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளை வலுப்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கீடு.
 22. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் ஆராய்ச்சி மற்றும் வேளாண் கல்வியை வலுப்படுத்துவதற்கு ரூ. 573.24 கோடி ஒதுக்கீடு
 23. தமிழ் வழி பயிலும் மாணவர்களுக்காக தமிழில் வேளாண் மற்றும் தோட்டக்கலை கல்வி அறிமுகம்
 24. வேளாண்மையில் தொழில் முனைவோர்களை ஈர்க்க வேளாண் தொழில் முனைப்பு மையம் வலுப்படுத்தப்படுவதுடன், வையான இடங்களில் தொழில் முனைப்பு மையம் அமைக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *