• Wed. Feb 19th, 2025

ஆர்எஸ்எஸ் கூடாரமாகிறதா பெரியார் பல்கலைக்கழகம்?

By

Aug 16, 2021

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் வேதசக்தி என்ற பெயரில் சொற்பொழிவு நடத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் ஆய்வு மையத்தின் பெயரில் வேதசக்தி என்ற பொருளில் சொற்பொழிவு வைப்பதா? என சேலம் மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில் கண்டனம் தெரிவித்துள்ளனர். முத்தமிழறிஞர் கலைஞர் மதம் சாதி மூடநம்பிக்கை இவற்றிக்கு அப்பாற்பட்ட சுயமரியாதை சிந்தனை வித்தகர் பகுத்தறிவாளராவார்.


ஆர்எஸ்எஸ் ஆதரவுடன் செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் கூட ஏற்படாதவாறு பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் சுயமரியாதைக்கு எதிராக வேதசக்தி வர்மக் கலை என்ற தலைப்பில் சொற்பொழிவு ஏற்பாடு செய்து உள்ளார். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் அழைப்பிதழில் வர்மக் கலை என்பதற்குப் பதில் வற்மக் கலை என்று தமிழில் தவறாக ஆச்சிடப் பட்டுள்ளது கண்டனத்திற்குரியது என மாநில துணைச் செயலாளர்
திமுக மாணவர் அணியைச் சேர்ந்தவருமான தமிழரசன் தெரிவித்துள்ளார்.