ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அமைத்துள்ள நிலையில் ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம் இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தில் ஆப்கானிஸ்தானின் தற்போதையை நிலை குறித்தும், அடுத்த நடவடிக்கை குறித்தும் ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்ரஸ் விளக்கம் அளிக்க உள்ளார். ஆப்கனில் மக்களின் உயிர் மற்றும் உடமைகளுக்கு எவ்வித ஆபத்தையும் தாலிபான்கள் ஏற்படுத்த கூடாது என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இதனிடையே நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், ஆப்கானிஸ்தான் பயங்கரவாதத்தின் உற்பத்திக் களமாக இருக்க கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார். காபூலில் தற்போது நிலவுவது மிகவும் மோசமான சூழல் என்று கூறியுள்ள அவர், ஆப்கானில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதனிடையே தனது தூதரகங்களை காலி செய்துள்ள அமெரிக்கா, ஆப்கானிஸ்தானியர்கள் மற்றும் பிற நாட்டவர்களை காபூலில் இருந்து பாதுகாப்பாக வெளியேற சாலைகள், விமான நிலையங்கள், எல்லைகளை மூடக்கூடாது என்று தாலிபான்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.