• Mon. Jun 23rd, 2025
WhatsAppImage2025-06-06at0431542
WhatsAppImage2025-06-06at04315413
WhatsAppImage2025-06-06at04315415
WhatsAppImage2025-06-06at04315412
WhatsAppImage2025-06-06at0431543
WhatsAppImage2025-06-06at0431548
WhatsAppImage2025-06-06at0431547
WhatsAppImage2025-06-06at04315410
WhatsAppImage2025-06-06at0431549
WhatsAppImage2025-06-06at04315411
WhatsAppImage2025-06-06at0431545
WhatsAppImage2025-06-06at04315414
WhatsAppImage2025-06-06at0431544
WhatsAppImage2025-06-06at0431546
previous arrow
next arrow

ஆண்ழகன் போட்டியில் பங்கேற்ற இளைஞருக்கு ஊர்மக்கள் உற்சாக வரவேற்பு!…

By

Aug 17, 2021

பல்வேறு தடைகளையும் கடந்து கோவையில் நடைபெற்ற ஆண்ழகன் போட்டியில் பங்கேற்ற இளைஞருக்கு ஊர்பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஆம்பலாபட்டு தெற்கு கீழக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் அரவிந்த், டிப்ளமோ சிவில் இன்ஜினியராக உள்ள இவர் ஆணழகன் போட்டியில் பங்கேற்க பொருளாதார ரீதியாக பல பிரச்சனைகளை சந்தித்து வந்தார்.

இதையறிந்த ஊர் மக்கள் அரவிந்த் போட்டியில் பங்கேற்க தேவையான பண உதவி செய்துள்ளனர். இதனால் சுதந்திர தினத்தன்று கோயம்புத்தூரில் நடைபெற்ற இந்திய அளவிலான மிஸ்டர் இந்தியா ஆண்ழகன் போட்டியில் அரவிந்த் பங்கேற்றுள்ளார். இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தோர் பங்கேற்ற இந்த போட்டியில், 70 கிலோ எடைபிரிவில் பங்கேற்ற அரவிந்த் 7வது இடம் பிடித்தார். இதனையடுத்து ஊர் திரும்பிய அரவிந்துக்கு பொதுமக்கள் பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.