• Fri. Jan 17th, 2025

ஆண்டிபட்டியில் வீர ஆஞ்சநேயர் கோவிலில் ஆடி அமாவாசை விழா!…

By

Aug 8, 2021

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் ஆடி அமாவாசை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.


தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மேற்கு ஓடைத் தெருவில் அமைந்துள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் ஆடி அமாவாசை விழாவை முன்னிட்டு கோவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.இன்று காலையில் ஆஞ்சநேயருக்கு விபூதி, மஞ்சள், குங்குமம் , பால், தயிர், தேன், இளநீர், பழங்கள் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகம் செய்யப்பட்டு ,மகா தீபாராதனை காட்டப்பட்டது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு , வடை புளியோதரை வழங்கப்பட்டது. ஆஞ்சநேயர் பகவானுக்கு புஷ்ப அலங்காரத்துடன், வடை மற்றும் துளசி மாலைகள் சாத்தப்பட்டு, அனுமன் சாந்த சொரூபியாக பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியார் செய்திருந்தனர்.