• Tue. Dec 10th, 2024

ஆட்டுக்காக முதியவர் கொலையா?

By

Aug 9, 2021

பள்ளிபாளையம் அருகே ஆடுகளை மேய்த்து கொண்டிருந்த முதியவரை கொலை செய்துவிட்டு, ஆடுகளை திருடிச்சென்ற மர்மநபர் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே வெள்ளிக்குட்டை பகுதியை சேர்ந்தவர் காளியப்பன். இவர் அதே பகுதியில் உள்ள ஏரிக்கரை அடுத்துள்ள பகுதியில் கொட்டகை அமைத்து ஆடுகளை மேய்த்து வாழ்வதாரம் நடத்தி வந்தார். இவர் முகம் மற்றும் உடலில் காயங்களுடன் கட்டிலில் சடலமாக கண்டதை பார்த்த பகுதி மக்கள் பள்ளிபாளையம் காவல்துறைக்கு தகவல் கொடுத்ததை அடுத்து, தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மர்மநபர்கள் சிலர் முதியவரை கட்டிபோட்டு கட்டிலில் படுக்க வைத்து கற்களால் முகத்தில் தாக்கி அவர் மேய்த்து வந்த 40ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 3 ஆடுகளை திருடிச்சென்றுள்ளனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், கூடுதல் துணைகாவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். ஆடுமேய்த்து வாழ்வாதாரம் நடத்தி வந்த முதியவர் காளியப்பன் மர்மமான முறையில் கொலை செய்யபட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.