ராமேஸ்வரம்: ஆடி அமாவாசை யொட்டி ராமேஸ்வரத்தில் ஆக.,7 முதல் 9 வரை பக்தர்கள் லாட்ஜில் தங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பரவும் கொரோனா பரவலை தடுக்கவும், ஆடிக் கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடி திருக்கல்யாண விழாவுக்கு கோயில்களில் பக்தர்கள் கூடுவதை தவிர்க்க அனைத்து கோயிலையும் மூட தமிழக அரசு உத்தரவிட்டது.
இதில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித் திருக்கல்யாண விழா விமரிசையாக நடக்கும்.
இதனால் ஆக., 1 முதல் ராமேஸ்வரம் கோயில் மூடப்பட்ட நிலையில், ஆடி அமாவாசையான ஆக., 8ல் ராமேஸ்வரத்திற்கு ஏராளமான பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் நீராட வாய்ப்பு உள்ளது.
இதனால் கொரோனா பரவும் அபாயம் உள்ளதால், ஆக., 7 முதல் 9 வரை ராமேஸ்வரத்தில் தங்கும் விடுதியில் பக்தர்களை அனுமதிக்க கூடாது என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. எனவே ராமேஸ்வரம் விடுதியில் தங்கி நீராட வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும் என இந்து அமைப்பினர் தெரிவித்தனர்.