• Sun. Mar 16th, 2025

ஆடி அமாவாசை தினத்தில்.., வெறிச்சோடிய குமரி கடற்கரை…!

By

Aug 8, 2021

கடந்த ஆண்டு முதலே ஆடி அமாவாசை தினத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, மறைந்து போன பெற்றோர்கள், அல்லது உறவுகளின் நினைவை போற்றும் வகையில், மறைந்த ஆத்மாக்களுக்கு திதி, அல்லது தர்ப்பணம் என்பது இந்து மத மக்கள் பின்பற்றி வந்த ஒரு கடமை செயல்கள். கொரோனா காரணமாக அரசு எடுத்து வரும் நடவடிக்கையின் காரணமாக பாரம்பரிய வழக்கம் அரசு ஆணையால் தடை செய்யப்பட்டதால்.

ஒவ்வொரு ஆடி அமாவாசை தினத்தில் கன்னியாகுமரி கடற்கரையில் எள்ளை போட்டால் எண்ணெய் ஆகி விடும் பழமொழியை உண்மை ஆக்குவது போல் மக்கள் கூட்டமும், தர்ப்பணம் செய்யும் புரோகிதர் கூட்டமும் நிறைந்து காணும் கன்னியாகுமரி முக்கடல் சங்கம கடற்கரை பகுதியில் இன்று எவ்வித ஆரவாரமும் இன்றி ஆங்காங்கே கண்காணிப்பு காவலர்களை மட்டுமே காண முடிகிறது. கடற்கரை, குமரி பகவதி அம்மன் கோயில் செல்லும் பாதைகள் எல்லாம் அடைக்கபட்டு அந்தந்த இடங்களில் பாதுகாப்பு பணியில் காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.