


நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் குடிசைமாற்று வாரிய பயனாளிகளிடம் கலந்துரையாடல்
நடைபெற்றது.
ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு கடந்த ஆட்சியில் அதிமுகவினர் 15 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை அதிக தொகை வாங்கி இருந்ததும் அது ஆட்சி மாறியதால் தற்போது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இதுதொடர்பாக கூட்டம் நடப்பதை தெரிந்து பணம் திருப்பிக் கொடுத்ததும் தெரியவந்துள்ளது.
….. யாரேனும் அதிகப்படியாக தொகை கேட்டால் புகார் செய்யலாம் என்று திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்….

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் வீடின்றி தவிக்கும் ஏழைகளுக்காக மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சேலம் மண்டலத்தின் சார்பில் 848 வீடுகள் கட்டும் பணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் பின்பக்கத்தில் 6 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு அந்த நிலம் கடந்த 2019 ஆம் ஆண்டு கட்டுமான பணிக்காக ஒப்படைப்பு செய்யப்பட்டு அதில் 848 வீடுகள் மொத்தம் அதில் ஒரு பகுதி 720 வீடுகள்
31 .8. 2020 க்குள்ளும் 128 வீடுகள் போன்ற மற்றொரு பகுதி 7.9 .2020 க்குள்ளும் கட்டி ஒப்படைப்பு செய்யப்போவதாக ஒப்பந்தம் போடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது 733 கோடியே 52 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் இந்த வீடுகளுக்கு மத்திய அரசின் பங்காக 127 கோடியே 20 லட்சம் ரூபாயும் மாநில அரசின் பங்காக 508 கோடியே 80 லட்சம் ரூபாயும் பொதுமக்களின் தங்கள் சுய பங்களிப்பாக வீடு ஒதுக்கீடு பெற்றவர்கள் தலா ரூ ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 500 கட்ட வேண்டுமென்றும் அதன்படி பொதுமக்கள் பங்களிப்பாக 97 கோடி ரூபாய் 55 லட்ச ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வந்தது உரிய காலத்தில் வீடுகள் கட்டி முடிக்கப்படாத தால் பொது மக்களுக்கு வீடுகளை ஒப்படைப்பதில் தேக்கம் ஏற்பட்டது இதுகுறித்தும் அரசு நிர்ணயித்த தொகைக்கு மேல் 15 ஆயிரம் முதல் 30 ஆயிரம், 40 ஆயிரம் வரை பணம் கட்டிய
முதல் கட்ட ஒதுக்கிடு பெற்ற 220 பயனாளி பொதுமக்கள் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரனிடம் ரகசியமாக புகார் தெரிவித்தனர்
இதுகுறித்து விசாரிக்க திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று பயனாளிகள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர்கள் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டம் எம்எல்ஏ ஈஸ்வரன் தலைமையில் நடந்தது இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களிடம் எம்எல்ஏ நடத்திய விசாரணையில் ஒவ்வொரு வீடு ஒதுக்கீட்டுகும் 15 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை கூடுதலாக கடந்த ஆட்சியில் அதிமுகவினரால் வசூலிக்கப்பட்டு இருந்தது உறுதியானது. ஆனால் இந்தக் கூட்டம் நடக்கப் போவதை அறிந்து அந்தப் பணம் அனைவருக்கும் திருப்பி கொடுக்கப்பட்டதும் தெரியவந்தது.
இதன் மூலம் சுமார் ஒரு கோடி அளவுக்கு நடக்க இருந்த முறைகேடு தடுக்கப்பட்டுள்ளது மேலும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட சேலம் மண்டல தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் பொதுமக்களின் சந்தேகங்களுக்கு பதிலளித்தனர்.
கூட்டத்தில் பேசிய எம் எல் ஏ ஈஸ்வரன் வீடு ஒதுக்கீடு செய்வதற்கு மற்றும் வேறு ஏதாவது காரணங்களை கூறி யாராவது இடையில் பணம் கேட்டால் கொடுக்க வேண்டாம் இது குறித்து தன்னிடம் ரகசியமாக புகார் தெரிவிக்கலாம் உரிய நடவடிக்கை எடுப்பேன் இதே போல் பணத்தை கொடுத்து திரும்பி வராமல் இருந்தால் தன்னிடம் தெரிவித்தால் திரும்பப் பெற்று தருவேன் எனக் கூறினார். கூடுதல் பணம் கொடுத்தது யார் என சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் கேட்டவுடன் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரும் கை உயர்த்தியது அதிர்சியாக இருந்தது ஆனால் இது குறித்து வெளியே பிரச்சனை வராமல் இருக்க அனைவரையும் கூப்பிட்டு அதிகப்படியான வசூலிக்கப்பட்ட பணங்கள் திருப்பி செலுத்தியதும் நிரூபணமாகியுள்ளது. மேலும் கூட்டத்தில் விளையாட்டு மைதானம் கழிப்பறை சமுதாயக்கூடம் வண்டி நிறுத்தும் இடம் பாதுகாப்பு உள்ளிட்டவை தொடர்பாக பொதுமக்கள் கேள்விகளை எழுப்பினர் இடம் ஒதுக்கீடு செய்வதில் குலுக்கல் முறை மாற்றுத்திறனாளிகள் வயதானவர்கள் இதய நோயாளிகளுக்கு முறைப்படி உரிய ஆவணங்களை பரிசோதித்து கீழ்த்தளம் ஒதுக்கி தரப்படும் என்றும் வீட்டில் இருந்து வெளியேறும் கழிவு நீரை சுத்திகரித்து அனுப்ப தேவையான ஏற்பாடுகளைச் செய்வதில் அதற்கான அனுமதி பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டதால் தான் வீடு ஒதுக்கீடு செய்வதில் சற்று கால தாமதம் ஏற்படுவதாகவும் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து விட்டதாகவும் இன்னும் 6 மாத காலத்திற்குள் நிச்சயமாக பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு வீடுகள் ஒப்படைப்பு செய்யப்படும் எனவும் எம்எல்ஏ ஈஸ்வரன் பொதுமக்களுக்கு உறுதியளித்தார்.
தாங்கள் முறைகேடாக கொடுத்த பணம் திரும்பி வந்தது குறித்து பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர் எம்எல்ஏவின் நேரடி தலையிட்டால் தான் இந்தப் பணம் தங்களுக்கு திரும்பி வந்ததாகவும் தங்களுடைய தேவையையும் வறுமையையும் பயன்படுத்தி சிலர் இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபட்டு இருந்ததாகவும் தற்போது எம்எல்ஏ அதனை தடுத்து தங்களுடைய பணம் கிடைக்க காரணியாக இருந்ததாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர் நிகழ்ச்சியில் சேலம் மண்டல குடிசை மாற்று வாரியத்தின் உதவி பொறியாளர் இளநிலை பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்

