

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் ப்ரீ பையர் விளையாடி கொண்டிருந்தை மனைவி கண்டித்ததால் ,கணவர் சக்திவேல் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சக்திவேல்.இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு வினோதினி என்பவரை திருமணம் செய்து நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே விலாங்காட்டூர் பகுதியில் தனியார் நூல் மில்லில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.இதைதொடர்ந்து ப்ரீபையர் விளையாட்டில் ஆர்வம் கொண்ட இவர் தொடர்ந்து வேலைக்கு சென்றுவிட்டு விளையாடி வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை வேலைக்கு செல்லுவதாக, மனைவி வினோதினி கணவர் சக்திவேலிடம் தெரிவித்தார் .இருப்பினும் சக்திவேல் அதனை பொருட்படுத்தாமல் விளையாடி கொண்டிருந்தார்.இதையடுத்து வினோதினி கணவரை கண்டித்து விட்டு குளிக்க சென்றுள்ளார்.இதன்பின்னர் திரும்பி வந்து பார்த்த போது சக்திவேல் வீட்டில் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார்.
இதன் பின்னர் மனைவி கொடுத்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிபாளையம் போலீஸார் உயிரிழந்த கணவர் சக்திவேல் உடலை மீட்டு பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவி மற்றும் அவருடன் விளையாடி வந்த சக தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே ஆன்லைன் மூலம் பல்வேறு விளையாட்டுகள் தடை செய்யப்பட்டு வரும் நிலையில் இதுபோன்ற விளையாட்டுகளால் உயிர்ப்பலி ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.அருமையான குடும்ப வாழ்க்கையில் இது போன்ற சித்து விளையாட்டுகளால் குடும்பமே சின்னாபின்னமாகி போகிறது. எனவே இதுகுறித்த மிகப்பெரிய அளவிலான சமூக விழிப்புணர்வு தேவைப்படுகிறது.அரசும், அரசு சார்ந்த நிறுவனங்களும் ,சமூக ஆர்வலர் அமைப்புகளும் ,இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

