• Sat. Apr 20th, 2024

கோவையில் பல கோடிகள் அம்பேல்!…

By

Aug 7, 2021

மோசடி நிறுவனங்களில் பணம் போட்டு ஏமாந்தவர்கள் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கலாம் முதலீட்டாளர்களுக்கு தகவல்.

கோவையை மையமாக கொண்டு செயல்பட்டு வந்த நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாந்த முதலீட்டாளர்கள் ஆவணங்களுடன் வந்து பொருளாதார குற்றப்பிரிவில் மனு அளிக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

கோவையில் மோசடி நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவா்கள் கோவை மாநகர பொருளாதார குற்றப் பிரிவில் புகாா் அளிக்கலாம் என தெரிவித்துள்ளனா்.

கோவை, ராமநாதபுரம் கிருஷ்ணா நகரில் செயல்பட்டு வந்த கிரீன் கிரெஸ்ட் நிதி நிறுவனம், சாய்பாபா காலனியில் இயங்கி வந்த ட்ரீம்ஸ் மோக்கா் குலோபல் லிமிடெட், காந்திபுரத்தில் இயங்கி வந்த ஏரோ டிரேடிங், சரவணம்பட்டியில் இயங்கி வந்த வின் ஹெல்த், போத்தனூா் குறிச்சி ஹவுஸிங் யூனிட்டில் செயல்பட்டு வந்த அன்னை சிட்ஸ் நிதி நிறுவனங்களின் இயக்குநா்கள், நூற்றுக்கணக்கான நபா்களிடம் செலுத்தும் தொகைக்கு ஏற்ப இரண்டு மடங்கு பணம் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் பணம் வசூல் செய்து ஏமாற்றியுள்ளனா்.

இது தொடா்பாக மாநகரப் பொருளாதார குற்றப் பிரிவு போலீஸில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மேற்கண்ட நிறுவனங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் உரிய ஆவணங்களுடன் வருகிற ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் கோவை பொருளாதார குற்றப் பிரிவு அலுவலகத்தில் புகாா் அளிக்கலாம் என போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *