• Sun. Dec 21st, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தேசிய மருத்துவ கவுன்சில் குழுவினர் ஆய்வு…..

By

Aug 10, 2021

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கட்டப்பட்டு வரும் மருத்துவக்கல்லூரி கட்டிடம் மற்றும் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் தேசிய மருத்துவ கவுன்சில் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.


விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான அங்கீகாரம் வழங்குவதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ளனவா என்பது குறித்து தேசிய மருத்துவ கவுன்சில் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர் .டாக்டர் மல்லிகா அர்ஜீன் மற்றும் டாக்டர் விபின் சந்திரா ஆகியோர் இந்த ஆய்வு செய்தனர். நோயாளிகளுக்கான சிகிச்சை பிரிவு, படுக்கை வசதி மற்றும் அலுவலகம், அரசு மருத்துவக் கல்லூரியின் பிரதான கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள வகுப்பறை, ஆய்வுக் கூடம், உடற்கூறியல் ஆய்வறை உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் உள்ளதா எனவும் ஆய்வு நடத்தினர். மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் 22 துறைகளை சேர்ந்த டாக்டர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், ஆய்வக நுட்பனர்கள், அலுவலக பணியார்கள் குறித்து ஆய்வு செய்தனர். இன்றும் நாளையும் இரண்டு நாட்கள் தொடர்ந்து இந்த ஆய்வு நடக்கிறது..ஆய்வு முடிவை தேசிய மருத்துவ கவுன்சிலில் சமர்ப்பிக்க உள்ளனர்.