• Mon. Aug 17th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

மாற்றுத்திறனாளிகளுக்கான T20 சாம்பியன் கிரிக்கெட் போட்டி!…

By

Aug 12, 2021

தேனி மாவட்டத்தில் தமிழ் நாட்டை சார்ந்த மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகள் T20 சாம்பியன் கிரிக்கெட் போட்டி ,தேனியில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேசன் கிரிக்கெட் கிரவுண்டில் இன்று தொடங்கியது.

இந்த போட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணி மற்றும் மாநில கிரிக்கெட் அணியை சார்ந்த பல்வேறு வீரர்கள் விளையாடி வருகின்றனர். இந்தப் போட்டியானது ,நான்கு நாட்கள் நடைபெற உள்ளது .தமிழகத்தில் உள்ள சிறந்த மாற்றுத் திறனாளி வீரர்களைக் கொண்டு நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு அணியும் ,மூன்று முறை எதிர் அணியுடன் விளையாட வேண்டும். இறுதி ஆட்டம் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று நாக்-அவுட் முறையில் முடிவடைகிறது. இந்தப் போட்டியானது மாற்றுத்திறனாளிகளின் திறமைகளை வெளிக்கொணர்வது அவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கோடு நடைபெறுகிறது.