• Sat. Sep 20th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

நெல்லை அரசு அருங்காட்சியகம் சார்பில் இணையவழி வழிகாட்டி நிகழ்ச்சி!…

By

Aug 7, 2021

நெல்லை அரசு அருங்காட்சியகம் ,திருநெல்வேலி மற்றும்NPNK வேலை வாய்ப்பு மையம் இணைந்து நடத்தும் “TNPSC இனி ரொம்ப Easy” என்கிற இணையவழி வழிகாட்டி நிகழ்ச்சியினை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் அரசு வேலை கனவை அடைய விரும்புபவர்களுக்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். வரும் ஞாயிற்றுக்கிழமை 08/ 08 /2021 அன்று பகல் 12 மணி அளவில் நடைபெறும். இந்நிகழ்வில் ஶ்ரீ லிஷா ஸ்டிபிலா தெரஸ், துணை காவல் கண்காணிப்பாளர் நாங்குநேரி, . ஊக்கவுரை அளிக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வில் அரசியல் அறிவியல் தேர்வுக்கு தயார் படுத்துவது குறித்த தகவல்கள் சிறந்த வல்லுனர் கொண்டு வழங்கப்பட உள்ளது.
இப்பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள்.
ஜூம் செயலி எண்: 8740995990
கடவு சொல்: 333543. என்கிற தளத்தில் இணைய வேண்டும். இப்பயிற்சியில் போட்டித் தேர்வுக்கு தங்களை தயார் படுத்தும் மாணவ மாணவிகள் அனைவரும் கலந்துக் கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 9444973246 என்கிற எண்ணில் வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்டக் காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி அவர்கள் தெரிவித்தார்.