• Tue. Feb 24th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

திரையரங்கு மூடப்பட்டதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி- நலவாரியம் அமைக்க வேண்டும்- நெல்லை ஆட்சியரிடம் கோரிக்கை…

Byadmin

Aug 2, 2021

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த திரையரங்கு தொழிலாளர் நலச்சங்கம் தலைவர் டேவிட் ஆரோக்கிய ராஜ் செயலாளர் மாரியப்பன் தலைமையில் திரையரங்கு தொழிலாளர்கள் நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவிடம் மனு கொடுக்க திரண்டு வந்தனர். அந்த கோரிக்கை மனுவில் கடந்த 2020 ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டது. இதனால் எங்கள் வாழ்வாதரம் மிகவும் பாதிக்கப்பட்டது. வேலைவாய்ப்பை இழந்தோம்.
இந்த ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் இருந்து மீண்டும் திரையரங்குகள் மூடப்பட்டது. வாழ்வாதாரம் பாதிக்கபட்ட எங்களுக்கு இதுவரை எந்த நிவாரண உதவியும் கிடைக்கவில்லை. திரையரங்கு தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும். நல வாரியம் மூலம் அடையாள அட்டை வழங்கி அதன் மூலம் உதவி செய்ய வேண்டும் என்று அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டிருந்தது.