• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர் வீட்டில் 89 பவுன் தங்க நகைகள் திருட்டு: போலீஸ் விசாரணை

Byadmin

Jul 9, 2021

ஆழ்வார்திருநகரியில் ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர் வீட்டில் 89 பவுன் நகைகள் திருடு போனது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி, வாய்க்கால் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள்,  ஒய்வு பெற்ற மின்‌‌‌வாரிய ஊழியர். இவரது மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு 2 மகன்‌‌‌கள்‌‌‌ மற்‌‌‌றும்‌‌‌ ஒரு மகள் உள்‌‌‌ளனர்‌‌‌. கணவர் இறந்து விட்டார். மகன்கள் 2  மகன்‌‌‌கள்‌‌‌ சென்‌‌‌னையிலும்‌‌‌ மகள் திருமணமாகி பாளையங்‌‌‌கோட்‌‌‌டையிலும்‌‌‌ உள்‌‌‌ளனர்‌‌‌ மாரியம்‌‌‌மாள்‌‌‌ தனியாக வசித்துவருகிறார்‌‌‌. மாரியம்மாள் அருகில் உள்ள நிலத்தில்‌‌‌ மகளுக்கு புதிய வீடு கட்டி வந்‌‌‌துள்‌‌‌ளார்‌‌‌.

இந்நிலையில் நேற்று மாலை மாரியம்மாள், பீரோவை திறந்து பார்த்தபோது அதிலிருந்த 89 பவுன் நகைகளை காணாமல் போயிருந்ததை கண்‌‌‌டு அதிர்‌‌‌ச்‌‌‌சி அடைந்‌‌‌துள்‌‌‌ளார்‌‌‌. இதுகுறித்து ஆழ்வார்திருநகரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததுள்‌‌‌ளார்‌‌‌. புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் ஆய்வாளர் ஜீடி, சப் இன்ஸ்பெக்டர் இன்னோஸ் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இது சம்பந்தமாக விரைந்து வந்து திருவைகுண்‌‌‌டம்‌‌‌ டி.எஸ்‌‌‌.பி வெங்கடேஷ் விசாரணை நடத்தி திருட்டு சம்பந்தமான குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளார்.