• Mon. Dec 1st, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

உதயகுமாருக்கு கட்டம் சரியில்லை…

Byadmin

Jul 22, 2021

மதுரையில் திண்டுக்கல் மதுரை தேனி மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகளுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் வருவாய்த்துறை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன் ஐ.பெரியசாமி பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

பேட்டியின் போது  சாத்தூர ராமச்சந்திரன் கூறியதாவது. உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் பெறப்பட்ட மனுக்களுக்கு விரைந்து தீர்வு காண வருவாய் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இந்த 3 மாவட்டங்களில் இதுவரை 16 ஆயிரத்து 567 மனுக்கள்  பெறப்பட்டுள்ளன. உழவர் பாதுகாப்பு திட்டத்தில் அதிக பயனாளிகள் சேர்க்க வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு நிலங்களை கையகப்படுத்த வலியுறுத்தியுள்ளோம்.  ஏனெனில் அவை அரசுக்கு தேவை.. கடந்த காலத்தில் அதிமுக ஆட்சி செய்த தவறுகளை நாங்கள் செய்ய மாட்டோம்.

அதிமுக அமைச்சரவையில் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக ஆர்.பி.உதயகுமார் இருந்த போது . கிராம பஞ்சாயத்துக்கு அதிக வேக நெட் வசதி கொடுக்கும் ரூ.1815 கோடி மதிப்பிலான பாரத் நெட்  ஃபைபர் ஆப்டிக் டெண்டரில் ஊழல் நடைபெற்றுள்ளது என்று ஏற்கனவே மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்தார். இந்த டெண்டரில் ஊழல் நடைபெற்று உள்ளதாக கூட்டணி கட்சியான பாஜக ஒன்றிய அரசு டெண்டரை தடை செய்தது. இந்நிலையில் ஆர்.பி. உதயகுமாரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று ஆளுநரிடம் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். டெண்டர் கோப்புகளை கைப்பற்றி விசாரணை செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கும் ஸ்டாலின் வலியுறுத்தினார்.