• Mon. Sep 22nd, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

அதிமுகவுடன் அமமுக இணையுமா? நழுவிய டி.டி.வி. தினகரன்….

Byadmin

Jul 27, 2021

திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தன் உறவினரின் உடல் நலம் குறித்து கேட்டறிய அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் மருத்துவமனைக்கு வந்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈ.பி.எஸ்,ஒ.பி.எஸ் பிரதமரை சந்தித்திருப்பது குறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.
அ.தி.மு.க வை மீட்க வேண்டும் என்பது தான் எங்கள் இலக்கு. தேர்தல் வெற்றி, தோல்வியை கடந்து எங்கள் இலக்கை நோக்கி நாங்கள் பயணம் செய்கிறோம். அ.தி.மு.க – அ.ம.மு.க இணையுமா என்கிற கேள்விக்கு யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது என்றார்.தொடர்ந்து பேசிய அவர், கொள்கைக்காக என்னுடன் வந்தவர்கள் எல்லாம் என்னுடன் இருக்கிறார்கள். சுயநிலத்திற்காக வந்து விலை போக கூடியவர்கள் விலை போகிறார்கள். அ.தி.மு.கவை மீட்க வேண்டும் என்பது தான் எங்கள் முயற்சியும் சசிகலாவின் முயற்சியும். முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்துவது குறித்தான கேள்விக்கு உப்பை தின்றவர்கள் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும் சட்டப்படி நடவடிக்கைகள் எடுத்தால் சரிதான் என்றார். அ.தி.மு.க தொடங்கியது முதல் எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா என்கிற ஒற்றை தலைமையும் சிறைக்கு செல்லும் முன்பு வரை சசிகலா என்கிற ஒற்றை தலைமையில் தான் அ.தி.மு.க இருந்தது.தற்போது அந்த நிலை மாறி உள்ளது.மீண்டும் அது சரியாகும். தி.மு.க ஆட்சியில் என்ன மகிழ்ச்சியான விஷயம் என்பதை யோசித்து சொல்கிறேன். எதையெல்லாம் எதிர்த்து போராடினார்களோ அதையையே அவர்களே தற்போது செயல்படுத்துகிறார்கள்.அவர்கள் சொன்னதை மறந்து அவர்களே செயல்படுகிறார்கள். தி.மு.க ஆட்சியில் மகிழ்ச்சியை விட சிரிப்பு தான் உள்ளது என்றார்.