• Fri. Jul 24th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

விஜய், அஜித் ரசிகர்களை ஒன்றிணைத்த யூடியூப் பிரபலம்!

யூடியூப் விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களை சமூக வலைதளங்களில் ஒன்றிணைத்துள்ளார் என ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் கடந்த பிப்ரவரி 24ம் தேதி வெளியானது. இப்படம் குறித்து வழக்கம் போல விமர்சித்த ப்ளூ சட்டை மாறனுடன் ட்விட்டரில் அஜித் ரசிகர்கள் தொடர்ந்து சண்டை போட்டு வருகின்றனர். இதில், சுவாரஸ்யம் என்னவென்றால் விஜய் ரசிகர்களும் அஜித் ரசிகர்களுடன் இணைந்து ப்ளூ சட்டை மாறனை திட்டித் தீர்த்து வருகின்றனர். விஜய் மற்றும் அஜித் இருவரும் பல முறை முயற்சி செய்தும் ஒன்று சேராத ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறன் போடும் ட்வீட்டுகளால் தற்போது ஒன்று சேர்ந்துள்ளனர் என நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

அஜித்தின் வலிமை படத்தை மோசமாக விமர்சித்த ப்ளூ சட்டை மாறனை ரசிகர்களை தாண்டி சினிமா பிரபலங்கள் ஆன ஜான் கொக்கன், ஆரி, சுரேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் எச்சரித்துள்ளனர். ஆனாலும், தொடர்ந்து அஜித்துக்கு எதிரான பதிவுகளை ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டு வரும் நிலையில், அதிகப்படியான விஜய் ரசிகர்கள், அஜித் ரசிகர்களுக்கு ஆதரவாக அவர்களுடன் ஒன்றிணைந்து ப்ளூ சட்டை மாறனை திட்டி வருகின்றனர். ஏனென்றால், அடுத்து வரும் பீஸ்ட் படத்துக்கும் இதே வேலையைத் தான் இவர் செய்வார் இவருக்கு விஜய் ரசிகர்கள் யாரும் சப்போர்ட் பண்ணாதீங்க என விஜய் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

நடிகர்கள் 100 கோடி ரூபாய் சம்பளத்தை நோக்கி முன்னேறி வருகின்றனர். ஆனால், ரசிகர்கள் தேவையில்லாமல் சமூக வலைதளங்களில் ஆபாச சண்டைகளை போட்டுக் கொள்ளாமல் தங்களுக்கு பிடித்த படங்களை பார்த்து விட்டு கடந்து சென்றால், இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படாது என நியூட்ரல் ஃபேன்ஸ் அறிவுறுத்தி வருகின்றனர்.