குமுளியில் பயங்கரம் மாணவியை உடல் ரீதியாக துன்புறுத்தி நிர்வாண படம் எடுத்து மிரட்டிய இரண்டு வாலிபர்களை குமுளி போலீசார்கள் கைது செய்தனர்.
வண்டிப்பெரியாரைச் சேர்ந்த மாணவி ஒருவர் குமுளியில் படித்து வந்தார். இவரது பக்கத்து வீட்டுக்காரரான தோட்டத் தொழிலாளியான பிரஜித் என்ற வாலிபர், பிப்ரவரி 11-ம் தேதி கல்வி நிறுவனத்திற்கு வந்து, மாணவியின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி மாணவியை பைக்கில் அனைத்து வந்துள்ளார். ஆனால் அவர் வீட்டிற்கு மனைவியை வீட்டுக்கு அழைத்துச் செல்லாமல், குமுளி ரோசாப்பூ கண்டத்தில் உள்ள லாட்ஜுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அங்கு, பிரஜித்தின் நண்பர் அரணக்கல்லை சேர்ந்த கார்த்திக் என்பவரும் இருந்துள்ளார்.

இருவரும் மாணவியை உடல்ரீதியாக துன்புறுத்த முயன்ற போது மாணவி தடுத்துள்ளார், இதனால் மாணவியைத் தாக்கி காயப்படுத்தியுள்ளனர். இதை அடுத்து பிரஜித்தும் கார்த்திக்கும் சிறுமியை உடல்ரீதியாக துன்புறுத்திய காட்சிகளை பதிவு செய்தனர். பின்னர் பிரஜித் குமுளியில் இருந்து மாணவியை அவரது வீட்டில் கொண்டு போய் விட்டார். நடந்த சம்பவத்தை யாரிடமாவது கூறினால் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார்.
ஆனால் மாணவி இது குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதை அறிந்த பிரஜித் மற்றும் கார்த்திக், அவர்கள் எடுத்த வீடியோவை மாணவியின் குடும்பத்தினர்களிடம் காட்டி, போலீசில் புகார் செய்ய வேண்டாம், அவ்வாறு செய்தால் வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இது குறித்து சிறுமி மற்றும் அவரது பெற்றோர் குமுளி காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தனர். இதையறிந்த குற்றவாளிகள் இருவரும் வண்டிப்பெரியாரிலிருந்து தேனிக்கு தப்பிச்செல்ல முயன்ற போது குமுளி எல்லையில், போலீஸார்கள் இருவரையும் கைது செய்தனர். பின்னர் குற்றவாளிகள்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.