• Mon. Sep 15th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

மதுரையில் இளைஞரை வெட்டிப் படுகொலை

ByN.Ravi

Apr 26, 2024

மதுரை மாநகர் மேல அனுப்பானடி பகுதியை சேர்ந்தவர் அருள்முருகன் (29). இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தையுடன் வசித்து வருகிறார். மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் லோடுமேனாக பணிபுரிந்து வரும், அருள்முருகன் இன்று மதியம் விளாங்குடி பகுதியில் நடந்து சென்ற போது திடீரென அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று அருள் முருகனை தாங்கள் வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்னர். மேலும், அருள்
முருகனின் கையை தனியாக வெட்டியதோடு முகத்தில் 20க்கும் மேற்பட்ட முறை வெட்டி முகத்தை சிதைத்துள்ளனர். இதில், சம்பவ இடத்திலயே பரிதாபமாக அருள்முருகன் உயிரிழந்தார். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து
வந்த கூடல்புதூர் காவல்துறையினர் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை நடத்தினர்.
இதனைத்தொடர்ந்து, அருள்முருகனின் உடலனாது உடற்கூராய்விற்காக, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறை பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக, கூடல்புதூர் காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மதுரை விரகனூர் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கல்மேடு பகுதியை சேர்ந்த அருள்முருகனின் உறவினரான நவநீதன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்காக பழிக்கு பழியாக நடைபெற்றிருக்கலாம் என, தெரியவந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக கொலை செய்யப்பட்ட நவநீதனின் பெரியம்மா மகன் அருள்முருகன் என்பது குறிப்பிடதக்கது. மதுரை மாநகர் பகுதியில் பட்டபகலில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.