கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே கீழ முனையனூரைச் சேர்ந்த திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பழனியப்பன் மகன் சந்தோஷ் (வயது 22)
இவர் கோவில் திருவிழாக்களில் மின் விளக்குகள் மற்றும் மைக்செட் அமைத்து பராமரிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்

இந்நிலையில் மேலமாயனூரில் கோவில் கும்பாபிஷேக விழாவிற்காக மைக் செட்டுகள் அமைத்து கண்காணித்து வந்த நிலையில் இரவு குறைந்த அளவு மின்சாரம் (low voltage) வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அருகில் இருந்த மின்மாற்றி அருகே (Transformer) சென்று ஏதேனும் கோளாறு ஏற்பட்டுள்ளதா என்று பார்த்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த மாயனூர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.