மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள காங்கேய நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் நமகோடி மகன் விஜயகுமார் வயது 32. கொத்தனார் வேலைபார்த்து வந்தார்.இவருக்கு திருமணமாகவில்லை.
தற்போது மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் வசித்து வருகிறார்.இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை தனது இரு சக்கரவாகனத்தில் காங்கேயநத்தம் கிராமத்தில் உள்ள உறவினர்களை பார்க்கச் சென்றார்.

பன்னிக்குண்டு கிராமம் அருகே சென்ற போது, எதிரே வந்த அருப்புக்கோட்டையைச் சேர்ந்த செந்தில் மோட்டார் சைக்கிளில் வந்த போது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது.இதில் விஜயகுமார் பலத்த காயம் அடைந்து ஆம்புலன்ஸ் மூலம் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மருத்துவமனை செல்லும் வழியில் விஜயகுமார் உயிரிழந்தார்.
தகவல் அறிந்த சிந்துபட்டி போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். படுகாயம் அடைந்த செந்தில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சாலை விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.