• Fri. Apr 10th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

கொடைக்கானலில் வாளுடன் அச்சுறுத்திய வாலிபர் கைது..,

ByS.Ariyanayagam

Feb 20, 2026

கொடைக்கானலில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கையில் வாளுடன் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கையில் மிகப்பெரிய வாளுடன் திரைப்பட பாடல் பின்னணியில் வாகனங்களில் அமர்ந்தவாறு வீடியோ எடுத்து வாலிபர் சமூக வலைதளபக்கத்தில் வீடியோ பதிவிட்டு இருந்தார். இந்த வீடியோ வைரலான நிலையில்,

இது குறித்து கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு, வீடியோவை பதிவிட்ட கொடைக்கானல் மேல்மலை கிராமம் பூம்பாறையை சேர்ந்த செல்வக்குமார்(25) என்பவரை கைது செய்து வீடியோவில் பதிவு செய்த வாள், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொருட்களையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.