• Thu. Oct 29th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

சாலையில் விழுந்த அணில் குட்டியை மீட்டு மீண்டும் மரத்தில் கூடோடு சேர்த்து வைத்த இளைஞர்கள்..,

ByKalamegam Viswanathan

Oct 29, 2026

மதுரை மாநகர். தல்லாகுளம் அவுட்போஸ்ட் பகுதியில், அருகே உள்ள தனியார் நிறுவனப் பணியாளரான வினோத், டீ அருந்தச் செல்லும்போது, பிறந்த இரு நாட்களே ஆன மூன்று அணில் குட்டிகள் தவறி கீழே விழுந்து கிடப்பதைக் கண்டார்.

உடனே அவர், குட்டிகள் மீது இருந்த எறும்புகளை அகற்றி, கீழே இருந்த கூட்டையும் சரிசெய்தார். பின்னர், உடன் வேலை பார்க்கும் இளைஞர்களின் உதவியுடன் அவற்றை மீண்டும் வேப்பமரத்தில் கூட்டிலேயே பாதுகாப்பாகக் கட்டி வைத்தனர்.
விலங்குகள் மீதான அன்புக்கு வினோத் புதியவர் அல்ல. இதற்கு முன்பு, பிறந்த மூன்று நாட்களே ஆன அணில் குட்டியை மீட்டு, ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக அரவணைத்து வளர்த்தவர் இவர்.

அனைத்து உயிர்களும் மதிக்கப்பட வேண்டியவை என்பதை, வினோத்தின் இந்த பொறுப்பும் அக்கறையும் நமக்கு நன்றாக உணர்த்துகின்றன. இன்றைய சூழலில், மக்கள் இதுபோன்று ஆபத்தில் உள்ள விலங்குகளைக் கண்டால் அலட்சியமாக இருக்காமல், தங்களால் இயன்ற உதவியைச் செய்து, மற்றவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.