• Sun. Nov 2nd, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

ராதா மோகன் இயக்கத்தில்வாணி போஜனுடன் இணையும் யோகிபாபு

Byதன பாலன்

Jul 20, 2023

தமிழில் தொடர்ந்து ரசிகர்களுக்கு தரமான படைப்புகளை வழங்கி வரும், இந்தியாவின்முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த தயாரிப்பாக ‘சட்னி – சாம்பார்’ தொடரை அறிவித்துள்ளது. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த வெப் சீரீஸை தயாரிக்கிறது.

யோகிபாபு முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இந்த ஒரிஜினல் சீரிஸ் அனைத்து ரசிகர்களுக்கும் விருந்தாக அமையும். வாணி போஜன் மற்றொரு முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த ஹாட் ஸ்டார் ஸ்பெஷலில் ‘கயல்’ சந்திரமௌலி, நிதின் சத்யா, சார்லி, குமரவேல், காயத்ரி ஷான், தீபா, நிழல்கள் ரவி, ஐஸ்வர்யா, சம்யுக்தா விஸ்வநாத் மற்றும் நம்ரிதா ஆகியோரும் நடிக்கவுள்ளார்கள். பிரபல தயாரிப்பாளரும் இயக்குநருமான ஆர்.சுந்தர்ராஜன் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இதில் இளன், அகிலன் மற்றும் கேசவ் ராஜ் ஆகிய மூன்று குழந்தை நட்சத்திரங்களும் நடிக்கவுள்ளனர்.

‘பிச்சைக்காரன்’, ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ போன்ற பிளாக் பஸ்டர் படங்களில் பணியாற்றிய பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்கிறார். ‘சூப்பர் சிங்கர்’ போட்டியில் வென்று புகழ் பெற்ற அஜீஷ் அசோக் இசையமைக்கிறார்.

‘இரும்புத்திரை’, ‘சர்தார்’, ‘கைதி’ மற்றும் ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் பணியாற்றிய எழுத்தாளர் பொன்.பார்த்திபன் இந்த ஒரிஜினல் சீரிஸுக்கான வசனங்களை எழுதியுள்ளார். ஜிஜேந்திரன் படத் தொகுப்பு பணிகளை கவனிக்க, K.கதிர் கலை இயக்கம் செய்கிறார். பத்திரிக்கை தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, டி ஒன்., சதீஷ், டீம் எய்ம்.

இந்த புதிய ஒரிஜினல் சீரிஸை, ‘மொழி’ முதல் காலத்தால் அழியாத பல கிளாசிக் படங்களை வழங்கிய, தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர் ராதா மோகன் இயக்குகிறார்.

இயக்குநர் ராதா மோகன் இந்த வெப் சீரீஸ் பற்றிப் கூறுகிறபோது “சட்னி – சாம்பார்’ சீரிஸின் படப்பிடிப்பை, அட்டகாசமான குழுவுடன் இணைந்து, மகிழ்ச்சியுடன் துவங்கியிருக்கிறோம். இது முழுக்க, முழுக்க காமெடியாக அனைவரும் ரசிக்கும்படியான படைப்பாக இருக்கும்..” என்றார்.

நடிகர் யோகிபாபு இந்த வெப் சீரீஸ் பற்றிப் பேசும்போது, “சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து பார்க்கும்படியான ஒரு அருமையான சிரீஸாக இந்த “சட்னி சாம்பார்” இருக்கும்” என்றார்.

நடிகை வாணி போஜன் பேசும்போது, “டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் மற்றொரு படைப்பில் இணைவது பெரும் மகிழ்ச்சி. யோகி பாபுவுடன் நடிப்பது இதுவே முதன்முறை. எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர் ராதா மோகன் சார் இயக்கத்தில் பணிபுரியப் போகிறேன். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் அட்டகாசமான சிரீஸாக இது இருக்கும் என்றார்.