காய்கறி உட்பட அத்தியாவசிய பொருட்களின் கடுமையான விலைவாசி உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலில் திமுகவிற்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்றும் விருதுநகரில் நடைபெற்ற ஆர்ப்பட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.
அதிமுக கழக பொதுச்செயலாளர், எதிர்கட்சி தலைவர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனைக்கு இணங்க விருதுநகர் மேற்கு, கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் தமிழகத்தில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் தக்காளி, இஞ்சி, பூண்டு உட்பட காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்தும், அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுவதை கண்டித்தும் விருதுநகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் அதிமுக கழக அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமை வகித்து பேசினார். விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசும்போது,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் புரட்சித்தலைவி அம்மாவுடைய மறைவுக்கு பின்பு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இருக்குமா கலைந்து விடுமா என்று பேசிக்கொண்டிருந்தவர்கள் மத்தியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எக்கு கோட்டையாக உருவாக்கி அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய பொதுச் செயலாளராக ஒருமித்த குரலோடு தேர்ந்தெடுக்கப்பட்டு இன்றைக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடியின் அருகிலே சென்று அமருகின்ற அளவுக்கு இந்த இயக்கத்தை வளர்த்திருக்கின்ற கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்களின் உத்தரவிற்கு இணங்க இந்த மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது.
2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலின் போது நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகள் உள்ளிட்ட 520க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அளித்து கவர்ச்சியாக பேசி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக, இன்றுவரையில் பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அந்தர் பல்டி அடித்து திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருவதாக வெற்று தம்பட்டம் அடித்துக்கொண்டு விளம்பரங்களின் மூலமும் மக்களை ஏமாற்றி வருகிறது. விடியா திமுக ஆட்சியின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ்நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடும் என்று வெற்று தம்பட்டம் அடித்து விட்டு எந்த ஒரு புதிய திட்டத்தையும் செயல்படுத்தாமல் மக்களை ஏமாற்றி வருகிறார். விடியா திமுக அரசின் முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்களை ஏமாற்றும் விதமாக ஒவ்வொரு நாளும் அரசு நிகழ்ச்சியை கொச்சைப்படுத்தும் வகையில் முதலமைச்சரின் பேச்சை போட்டோ சூட் நடத்துவது போல் செய்துவிட்டு மக்களை ஏமாற்றி வருகிறார்.
அம்மாவுடைய ஆட்சி காலத்தில் எடப்பாடியார் ஆட்சி காலத்தில் மக்கள் நலனை முன்னிறுத்தி கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மூடுவிழா கண்டு வருவதோடு கழக ஆட்சியிலே எடப்பாடியார் ஆட்சியிலே கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், தனது அப்பா படத்துடன் ஸ்டிக்கர் ஒட்டி, ஏதோ தாங்கள் கொண்டு வந்த திட்டம் போல் தம்பட்டம் அடித்துக்கொண்டு செய்திகளை வெளியிட்டு மக்களை ஏமாற்றி வருகிறார். டாஸ்மார்க் மற்றும் மின்சார துறைகளில் கொள்ளையடித்த திமுக மந்திரி செந்தில்பாலாஜி, சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட போது, நாடகம் ஒன்றை நடத்தி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், முதலமைச்சர் உட்பட சக அமைச்சர்களும் சட்டத்தை மீறி இரவு பகலாக மருத்துவமனைச் சென்று அவரைப் பார்த்த நிகழ்வுகளை தொலைக்காட்சியிலும் பத்திரிகையிலும் மக்கள் கண்கூடாக பார்த்து வெறுப்படைந்துள்ளனர். மறைந்த கருணாநிதி ஆட்சிக்காலத்தின் போது அமைச்சராக இருந்த ஆலடி அருணா, என்.கே.கே.பி.ராஜா ஆகியோர் மீது குற்ற வழக்கு வந்த போது கருணாநிதியால் அவர்கள் இருவரும் அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
விடியா அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு காவலில் இருக்கும் செந்தில்பாலாஜியை அமைச்சரவிலிருந்து நீக்காமல் துறையற்ற அமைச்சராக வைத்திருப்பது, அவரை அமலாக்கத்துறையினர் விசாரிக்க விடாமல் பாதுகாத்து திமுக ஆட்சியை காப்பாற்றுவதற்காக தான் துடிக்கிறார் என மக்கள் எண்ணுகிறார்கள் பேசுகிறார்கள். அ திமுக சார்பில் நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் வாயிலாக விடியா திமுக அரசுக்கு தெரிவித்துக் கொள்வது என்னவென்றால் சாமானிய மக்களும் நடுத்தர மக்களும் கடுமையான உணவுப் பொருள் விலைவாசி உயர்வால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். எல்லா துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளது. சட்ட ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது. விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலில் திமுகவிற்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன் என்று பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் கழக எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச்செயலாளர் சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ், கழக மகளிர் அணி துணை செயலாளர் முன்னாள் திருவில்லிபுத்துார் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபாமுத்தையா, அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர், விருதுநகர் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் கலாநிதி, அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் சிவகாசி ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் வேண்டுராயபுரம் சுப்பிரமணியம், முன்னாள் அமைச்சர் திருவில்லிபுத்தூ்ர் நகரக் கழக செயலாளர் இன்பத்தமிழன், மேற்கு மாவட்ட கழக அவைத்தலைவர் வழக்கறிஞர் விஜயகுமார், கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சி.சுப்பிரமணியம், முன்னாள் மாவட்ட கழக செயலாளர் கே.கே.சிவசாமி, கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் வழக்கறிஞர் சேதுராமானுஜம், கழக சிறுபாண்மை பிரிவு துணைத் தலைவர் சித்திக், விருதுநகர் நகரக் கழக செயலாளர் முகமது நயினார், வெம்பக்கோட்டை ஒன்றிய பெருந்தலைவர் பஞ்சவர்ணம், சிவகாசி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் புதுப்பட்டி வி.ஆர்.கருப்பசாமி, விருதுநகர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கே.கே.கண்ணன், விருதுநகர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் தர்மலிங்கம், விருதுநகர் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர், மாவட்ட கவுன்சிலர் கே.ஏ.மச்சராஜா, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் சேதுராமன், அண்ணா தொழிற்சங்க மாநில இணைச்செயலாளர் சங்கரலிங்கம், மாவட்ட கவுன்சிலர் தடங்கம் நாகராஜ், விருதுநகர் கிழக்கு மாவட்ட அவை தலைவர் ஜெயப் பெருமாள், மாவட்ட இணைச்செயலாளர் ராஜேஸ்வரிவா சுதேவன், துணைச்செயலாளர் மாவட்ட கவுன்சிலர் இந்திரா கண்ணன், கிழக்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் கே. வி.பூபாலன், கிழக்கு மாவட்ட கழக பொருளாளர் குருசாமி, வத்ராயிருப்பு வடக்கு ஒன்றிய செயலாளர் சுப்புராஜ், வத்திராயிருப்பு தெற்கு ஒன்றிய செயலாளர் சேதுவர்மன், ராஜபாளையம் வடக்கு ஒன்றிய செயலாளர் குருசாமி, ராஜபாளையம் தெற்கு ஒன்றிய செயலாளர் நவரத்தினம், சிவகாசி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியராஜ், சிவகாசி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் கருப்பு என்ற லட்சுமி நாராயணன், ராஜபாளையம் வடக்கு நகரக் கழக செயலாளர் வழக்கறிஞர் துரைமுருகேசன், ராஜபாளையம் தெற்கு நகர கழக செயலாளர் பரமசிவம், சிவகாசி மாநகராட்சியின் பகுதி கழக செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சரவணகுமார், கருப்பசாமிபாண்டியன், சாம் என்ற ராஜா அபினேஸ்வரன்,காரியாபட்டி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ராமமூர்த்திராஜ், காரியாபட்டி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் வழக்கறிஞர் தோப்பூர் முருகன், சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கே.எஸ்.சண்முகக்கனி. மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் தேவதுரை, நரிக்குடி ஒன்றிய கழக செயலாளர் பூமிநாதன், திருச்சுழி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் முத்துராமலிங்கம், திருச்சுழி வடக்கு ஒன்றிய செயலாளர் முனியாண்டி, அருப்புக்கோட்டை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் முன்னாள் யூனியன் சேர்மன் வாசுதேவன், அருப்புக்கோட்டை வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் சங்கலிங்கம், நரிக்குடி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ராவிச்சந்திரன், வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் தங்கவேல், வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் மணிகண்டன், அருப்புக்கோட்டை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சக்திவேல்பாண்டியன், சாத்தூர் நகரக் கழக செயலாளர் எம்.எஸ்.கே.இளங்கோவன்,
சிவகாசி பொதுக்குழு உறுப்பினர் சித்துராஜபுரம் பாலாஜி, சாத்தூர் பொதுக்குழு உறுப்பினர் வேலாயுதம், விருதுநகர் பொதுக்குழு உறுப்பினர் அருணா நாகசுப்ரமணியம், அருப்புக்கோட்டை பொதுக்குழு உறுப்பினர் வீர சுப்பிரமணியம், திருவில்லிபுத்தூர் பொதுக்குழு உறுப்பினர் தமிழரசி கனகராஜ், திருச்சுழி பொதுக்குழு உறுப்பினர் பழனி, சேத்தூர்பேரூராட்சி கழகத்தினுடைய செயலாளர் பொன்ராஜ் பாண்டியன், செட்டியார்பட்டி பேரூர் கழகச் செயலாளர் அங்குதுறைபாண்டியன், மம்சாபுரம் பேரூராட்சி செயலாளர் ராஜேஷ்குமார், வத்ராயிருப்பு பேரூர் கழக செயலாளர் வைகுண்டமூர்த்தி, கொடிக்குளம் பேரூர் கழக செயலாளர் சங்கரமூர்த்தி, சுந்தரபாண்டியன் பேரூ்ர் கழக செயலாளர் மாரிமுத்து, புதுப்பட்டி பேரூர் கழக செயலாளர் ஜெயக்கிரி, காரியாபட்டி பேரூர் கழகச் செயலாளர் விஜயன், மல்லாங்கிணறு பேரூர் கழகச் செயலாளர் அழகர்சாமி, விருதுநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ், விருதுநகர் முன்னாள் எம்எல்ஏ வரதராஜன், மாவட்ட ஊராட்சி குழு சேர்மன் வசந்திமான்ராஜ், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எஸ்.என்.பாபுராஜ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுபாஷினி, மாவட்ட கழக இணைச்செயலாளர் அழகுராணி, மாவட்ட அண்ணா தொழி்ற் சங்க செயலாளர் பாண்டியன், ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய கழக செயலாளர் மயில்சாமி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முத்துப்பாண்டி, மாவட்ட விவசாய அணி செயலாளர் முத்தையா, மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் முத்துராஜ், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பிலிப்வாசு, மாவட்ட மீணவர் அணி செயலாளர் காசிராஜன், மாவட்ட கழக பொருளாளர் தேன்ராஜன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் குறிஞ்சி முருகன், மாவட்ட அண்ணா தொழிற் சங்க கௌரவத் தலைவர் குருசாமி, அரசு பேருந்து விருதுநகர் மண்டல செயலாளர் குருச்சந்திரன், அண்ணா மின்சார பிரிவு செயலாளர் ஜெய்சங்கர், டாஸ்மாக் மாதவன், முன்னாள் சேர்மன் விருதுநகர் சாந்தி மாரியப்பன், முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் மாரியப்பன், விருதுநகர் எம்ஜிஆர் மன்ற செயலாளர் நாகசுப்பிரமணியம், அம்மா பேரவை செயலாளர் கணேஷ்குரு, விருதுநகர் நகரமன்ற உறுப்பினர்கள் வெங்கடேஷ், சரவணன், மிக்கேல்ராஜ், வர்த்தக அணி செயலாளர் செல்வராஜ், மாவட்ட வழக்கறிஞர் பொருளாளர் ஸ்ரீதர், மாவட்ட வழக்கறிஞர் மாரிஸ்குமார், மாவட்ட இலக்கிய அணி தலைவர் சிவகாசி மாரிமுத்து, மாவட்ட எம்ஜிஆர்மன்ற துணைசெயலாளர் ஸ்ரீராம் பாலகிருஷ்ணன், முன்னாள் நகர கழக செயலாளர் சாவிநாகராஜ், மருது, மாவட்ட மகளிர் அணி சாந்தி, வழக்கறிஞர் ரவி, பாண்டியராஜன், வேலாயுதம், ராமு, வழக்கறிஞர் ராமமூர்த்தி, சரவணன், கந்தவேல், பத்மாவதி, பட்டம் புதூர் சேகர், மாவட்ட வழக்கறிஞர் ராஜசிம்மன், விருதுநகர் கிழக்கு அம்மா பேரவை மாவட்ட செயலாளர் கே.ஏ.மச்சேஸ்வரன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் கலைச்செல்வி, வழக்கறிஞர் பாலமுருகன், வீரேசன், பரமசிவம், வேங்கைமார்பன், சிவகாசி மாநகர கவுன்சிலர் கரைமுருகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மணிமேகலை, ராமநாதன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கருப்பசாமி பாண்டியன், மோகனவேல், மாணிக்கம், சுந்தர்கொண்டலசாமி, ராஜூ, சேரன இஸ்மாயில், முத்துமணி, விஜயகுமார், வெம்பக்கோட்டை ஒன்றிய துணைப் பெருந்தலைவர் ராமராஜ்பாண்டியன், மாவட்ட கவுன்சிலர் வேல்முருகன், அருப்புக்கோட்டை நகர அம்மா பேரவை செயலாளர் சோலை சேதுபதி, திரைப்பட நடிகர் கே.சி.பிரபாத், முன்னாள் அண்ணா தொழிற்சங்க அரசு பேருந்து மண்டல செயலாளர் ராமர், ஆவியூர் குமார். நரிக்குடி சந்திரன், மகாமூர்த்தி, வழக்கறிஞர் லோகையாசாமி, மாவட்ட கவுன்சிலர்கள் வேல்ராணி வெங்கடேஷ், நிர்மலா ஜெயக்குமார், கணேசன், மாவட்ட கவுன்சிலர் மகாலட்சுமி கருப்பசாமி, மகாலட்சுமி முத்துகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள், பேரூர் கழக நிர்வாகிகள், வார்டு கழக நிர்வாகிகள் அனைத்து சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.