• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இனி ரேஷன் கடைகளிலும் ‘மீண்டும் மஞ்சள் பை’…

Byகாயத்ரி

May 28, 2022

தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கக்கூடிய வகையில் ‘மீண்டும் மஞ்சள் பை’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்நிலையில் தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்குவதுடன், முதல்வர் அறிவித்த மஞ்சள் பை திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து தொழில்துறையினர் கூறியது, பிளாஸ்டிக் பயன்பாடு தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிறகும் இவற்றின் பயன்பாடு புழக்கத்தில் இருந்து வருகிறது. துணி பைகளின் பயன்பாடு அதிகரித்தால் பிளாஸ்டிக் பயன்பாடு தானாக குறைந்துவிடும். இதற்கு தமிழக அரசு அறிவித்த மீண்டும் மஞ்சள் பை திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். மேலும் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கும் பொது மக்களுக்கு இலவசமாக துணிப்பை உபயோகிப்பதன் மூலம் இவற்றின் பயன்பாடு அதிகரிக்கும். அதன்பிறகு துணி உற்பத்தி சார்ந்த நெசவாளர்கள், துணி உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் பயன்பெறுவார்கள் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.