சினிமா தயாரிக்க தொடங்கிய காலம் முதல் அரசர்கள், அவர்களது வாழ்விடங்கள், மக்கள், யுத்தங்கள் இப்படித்தான் இருக்கும் என்கிற பிம்பத்தை இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் கட்டமைத்து வைத்திருந்தனர். அவற்றை ஒட்டு மொத்தமாக ஓரங்கட்டி இருக்கிறது யாத்திசை திரைப்படம்.
அதிகாரத்தை அடைய பேரரசை எதிர்க்கத் துணியும் சிறு இனக்குழு ஒன்றினால் நடத்தப்படும் போராட்டத்தின் ரத்த வாடைதான் ‘யாத்திசை’.
7-ஆம் நூற்றாண்டின் பாண்டிய அரசன் அரிகேசரி. இவரது மகன் ரணதீரன் (ஷக்தி மித்ரன்). இந்த பாண்டிய பேரரசுக்கு எதிராக சேரர்கள் போரிடுகிறார்கள். அவர்களுடன் சோழர்கள் மற்றும் எயினர்கள் உள்ளிட்ட சிறுகுழுக்களும் இணைந்து உதவி புரிய, போரை வழிநடத்தும் ரணதீரன் தலைமையிலான பாண்டிய படை வெற்றிபெறுகிறது. இதன் எதிரொலியாக சேரர்கள் நாடு கடத்தப்பட, உதவியாக வந்த சோழர்கள் காட்டுக்குள் தலைமறைவாகின்றனர்.
இதில் பாண்டியர்களால் பாலை நிலத்திற்கு விரட்டப்பட்ட எயினர் குழுவைச் சேர்ந்த வீரன் கொதி (சேயோன் ) தனது குழுவைத் திரட்டி, சோழர்கள் உதவியுடன் ரணதீரனை வெல்ல முடிவு செய்கிறான்.
இறுதியில் ரணதீரனை கொதி வென்றானா? பாண்டிய பேரரசு வீழ்ந்ததா? – இதுதான் திரைக்கதை.
பேரரசுக்குள் அதிகாரத்தை அடைய நிகழும் சூழ்ச்சிகளும் துரோகங்களுமாகவும் அல்லது இரு பெரும் பலம்பொருந்திய அரசப்படைகளுக்கு இடையிலான சண்டைகளாகவுமே வரலாற்று புனைவு படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ஆனால், எயினர் குடி என்ற சிறிய இனக்குழு ஒன்று அதிகாரம் பொருந்திய பேரரசை எதிர்த்து ‘அதிகாரம்’ பெற்றதா என்ற சுவாரஸ்யமான ஒன்லைனை பிரமாண்ட காட்சி அமைப்புகளுடன் படமாக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் தரணி ராசேந்திரன்.
மூளும் போர்களுக்கும், வீழும் உயிர்களுக்கும், அரச மமதைக்கும் அடிப்படை ‘அதிகாரம்’ தான். அரசுகள் மாறக்கூடியது. அதிகாரம் மட்டுமே நிலையானது என்பதை நிறுவுகிறது படம்.
கதை கோரும் பிரமாண்டத்தையும், அதற்கேற்ற காட்சியமைப்பையும் எந்த சமரசமுமின்றி பதிவு செய்த விதம் களத்தை சுவாரஸ்யமாக்குகின்றன.
பல்வேறு இனக்குழுவைச் சேர்ந்தவர்களின் தனித்துவமான பழக்கவழக்கங்கள், அவர்களின் கலாச்சார வழிபாட்டு முறைகளின் சித்தரிப்பு, அவர்கள் வாழும் நிலபரப்பு, வீட்டு அமைப்பு, மண்பாத்திரங்கள், உணவுமுறைகள் உள்ளிட்டவற்றின் மூலம் அவர்களின் உலகில் நாமும் பிரவேசிக்கும் உணர்வு, காட்சிகளுக்குள் ஒன்ற உதவுகிறது.
குறிப்பாக, எயினர் குல கடவுள் கொற்றவைக்கான சடங்குகளும், உயிர் பலி கொடுக்கும் முறையும் சுவாரஸ்யம் கூட்டுகின்றன.
பழந்தமிழரின் மொழியை கூடுதல் சிரத்தையுடன் பதிவு செய்திருந்தது, அம்மக்களில் பெரும்பாலானோர் தங்கள் உடலை துணிக்கு பதிலாக ஆபரணம் மற்றும் நகைகளால் மூடியிருப்பது, தேவரடியார் முறையின் அவலம், பேரரசு தொடங்கி சிறு இனக்குழு வரை ஆணாதிக்க சமூகமாக இருந்ததை காட்சிப்படுத்தியிருந்த நுணுக்கமான அணுகுமுறை கவனிக்க வைக்கிறது.
ஷக்தி மித்ரன், சேயோன் இருவரின் அழுத்தமான ஆக்ரோஷமான நடிப்பும், அவர்களின் இறுதி சண்டைக்காட்சியும் அறிமுக நடிகர்கள் என்ற சாயலிலிருந்து விலகி நிற்கின்றன.
ராஜலட்சுமி, குரு சோமசுந்தரம், சுபத்ரா, சமர், வைதேகி அமர்நாத் உள்ளிட்டோரின் கதாபாத்திரத்திற்கு தேவையான யதார்த்த நடிப்பு படத்திற்கு பெரும் பலம்.
ரணதீரனுக்கு எதிரான முதல் சண்டைக்காட்சி தொடங்கி போர்க்களத்துக்கான விறுவிறுப்பு என படம் நெடுகிலும் சக்கரவர்த்தியின் பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரூட்டுகிறது. அகிலேஷ் காத்தமுத்துவின் பிரமாண்ட ஒளிப்பதிவு ப்ரேமுக்கு ப்ரேம் அழகியலுடனும், போர்க்காட்சிகளை படமாக்கியிருக்கும் விதமும் ரசிக்க வைக்கின்றன.
புதுவகையான திரையனுபவத்தை யதார்த்தமான காட்சிகளுடன் சொல்ல முனைத்திருக்கும் விதத்தில் ‘யாத்திசை’ கவனம் பெறுகிறது.
- பாஜக எம் பி உருவ பொம்மை எரிப்பு -20பேர் கைதுதிருமங்கலத்தில் டெல்லி பாஜக எம் பி உருவ பொம்மை எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டசம்யுக்த கிசான் போர்ச்சா […]
- கல்வி முறையை மாற்றி அமைக்க வேண்டும்- ஆளுனர் ஆர்.என். ரவி பேச்சுஇளைஞர்களுக்கு திறனுக்கு ஏற்ற கல்வி முறையை மாற்றி அமைக்க வேண்டும் என துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் […]
- விபத்துக்கு பிறகு கோரமண்டல் விரைவு ரயில் சென்னையிலிருந்து புறப்பட்டதுஒடிசா ரயில் விபத்து காரணமாக ரத்து செய்யப்பட்ட கோரமண்டல் விரைவு ரயில் இரண்டு நாட்களுக்கு பிறகு […]
- உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி மதுரை- கப்பலூர் சுங்கச்சாவடியில் மரக்கன்றுகள் அளித்து விழிப்புணர்வுஉலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி, கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகத்தினர் பள்ளி சிறுவர் , சிறுமிகளுக்கு விழிப்புணர்வு […]
- ஒடிசாவில் மீண்டும் ரயில் தடம் புரண்டது விபத்துநாட்டையே உலுக்கிய ரயில் விபத்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஒடிசாவில் இன்று சரக்கு […]
- பள்ளிகள் திறப்பு தேதி மீண்டும் மாற்றம்தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி ஏற்கனவே மாற்றப்பட்ட நிலையில் கோடை வெப்பம் காரணமாக மீண்டும் மாற்றப்பட்டுள்ளதுதமிழ்நாட்டில் […]
- ஆட்டம் காட்டி வந்த அரிசி கொம்பன் யானை பிடிபட்டதுகடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தின் பல பகுதிகளில் சுற்றித்திரிந்த அரிசிகொம்பன் யானை தற்போது பிடிபட்டுள்ளது.கேரள […]
- இன்று நோபல் பரிசு பெற்ற டென்னிஸ் கபார் பிறந்த நாள்முப்பரிமாண ஹோலோகிராபி கண்டுபிடிப்புக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற டென்னிஸ் கபார் பிறந்த நாள் இன்று […]
- மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் “நகைச்சுவை மன்ற கூட்டம்”மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நகைச்சுவை மன்ற கூட்டம் மிக மிக கோலகாலமாக கொண்டாடப்பட்டது. விழாவில் […]
- மோகன்லால் படத்தின் சாதனையை முறியடித்த 2018மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை கடந்த ஏழு ஆண்டுகளாக மோகன்லால் […]
- பூமியை பாதுகாக்கும் பெரும் பொறுப்பு மனிதனிடமே உள்ளது -இன்று உலக சுற்றுச்சூழல் நாள்பூமி ஏற்கனவே தன் வளங்களை வெகுவாக இழந்து வரும் நிலையில் பூமியை பாதுகாக்கும் பெரும் பொறுப்பு […]
- விருதுநகர் மாவட்ட தனிப்பிரிவு போலீசார் 21 பேர், திடீர் இடமாற்றம்…..விருதுநகர் மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணியாற்றி வந்த தனிப்பிரிவு போலீசார் 21 […]
- குமரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் ஒரிசா ரயில் விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி.தி மு க வின் தலைவர், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் அகவை 100_வது தினத்தை மிக […]
- ஆட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் ரயில் விபத்து நடந்துள்ளது -தொல்.திருமாவளவன் பேட்டிஅரசு ரயில்வே துறையை தனியாருக்கு ஒப்படைக்க வேண்டும் என்கிற உள்நோக்கத்தோடு செயல்பட்டதன் விளைவாகத்தான் புதிய பணியாளர் […]
- ஒடிசாவுக்கு விமான டிக்கெட் ரூ.4000 விருந்து ரூ.80,000” மாக அதிகரிப்பு – சு. வெங்கடேசன் எம்.பி ஆவேசம்ஒடிசாவில் ஏற்பட்டுள்ள ரயில் விபத்து நேரத்தில் தனியார் விமான நிறுவனங்கள் விமான டிக்கெட் விலையை உயர்த்தியுள்ளதாக […]