


நாகையில் புகழ்பெற்ற நாகப்பட்டினம் நீலாயத்தாட்சி அம்மன் ஆலயத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் வழிபாடு செய்தார்.
தமிழக மு.க ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் நாகப்பட்டினத்தில் உள்ள புகழ்பெற்ற அருள்மிகு நீலாயதாட்சி அம்மன் ஆலயத்திற்கு வருகை தந்தார். அவருக்கு சிவாச்சாரியார்கள் மலர்மாலை மற்றும் பூர்ண கும்ப மரியாதை அளித்து மேளதாளங்கள் முழங்க அழைத்துச் சென்றனர். அதனை தொடர்ந்து விநாயகரை வணங்கிய துர்கா ஸ்டாலின் கும்பாபிசேகம் நடைபெற்ற ராஜகோபுரத்தை பார்வையிட்டு காய ரோகனேஸ்வரர் மற்றும் நீலாயாதாட்சி அம்மனை வழிபாடு செய்தார்.






