

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூரில் அமைந்துள்ள சுங்கச்சாவடி நிர்வாகத்தினரால் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது. சர்வதேச யோகா தினத்தை ஒட்டி சுங்கச்சாவடி அலுவலக முன்புற வளாகத்தில், இங்கு பணிபுரியும் ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் பல்வேறு யோகா கலைகளை 30 நிமிடமாக தொடர்ந்து செய்து அசத்தினர். முன்னதாக யோகா பயிற்சியில் ஈடுபட்டவர்களுக்கு சுங்கச்சாவடி நிர்வாகத்தினரால் ஒரே மாதிரியான சீருடை வழங்கப்பட்டது.

