
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள டி கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமமான நரிக்குடி, நரசிங்கபுரம், கோபி நாயக்கன்பட்டி, சிலார்பட்டி ஆகிய பகுதிகளைச் சார்ந்த கிராம மக்கள் அனைவரும் இன்று ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
எம். சுப்புலாபுரம் கிராமத்திலிருந்து நரசிங்கபுரம், நரிக்குடி, சிலார்பட்டி, கோபி நாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளுக்கு தண்ணீர் வசதி, சாக்கடை வசதி, சாலை வசதி ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து பொதுமக்கள் அனைவரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். பஞ்சாயத்து தலைவர், எந்த ஒரு வசதியும் செய்து தரவில்லை என்று வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து தலைவர் எங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரும் வரை, நாங்கள் இந்த இடத்தை விட்டு நகர மாட்டோம் என்று கூறினர். மேலும் அவர் தலைமறைவாகி வெளியூர் சென்று விட்டார் அவரை கண்டுபிடித்து தர வேண்டும் என்று ஊர் பொதுமக்கள் கூறினர்.

