• Mon. Jan 20th, 2025

ஸ்ரீஆண்டாள் கோவில் உண்டியல் காணிக்கை 11 லட்சம் ரூபாய்..,

ByKalamegam Viswanathan

Jun 22, 2023

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீஆண்டாள் கோவிலில் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணிகள் நடைபெற்றது. கோவில் நிர்வாக அதிகாரி முத்துராஜா தலைமையில், காணிக்கைகள் எண்ணும் பணிகள் நடைபெற்றது. இதில் 11 லட்சத்து, 21 ஆயிரத்து, 356 ரூபாய் ரொக்கப் பணமாகவும், 71 கிராம் தங்கம் மற்றும் 29 கிராம் வெள்ளிப் பொருட்களும் காணிக்கையாக கிடைத்துள்ளது என்று அதிகாரி கூறினார். உண்டியல் காணிக்கையை எண்ணும் பணிகளை ஆய்வாளர் முத்துமணிகண்டன் மற்றும் அதிகாரிகள் மேற்பார்வையிட்டனர்.