புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரி வணிகவியல் துறையின் சார்பில் உலக இயற்கை வள பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. இவ்விழாவில் கல்லூரித் தலைவர் பொறியாளர் பொன்.பாலசுப்ரமணியன், கல்லூரி செயலர் பொன்.ரவிச்சந்திரன், முதல்வர் முனைவர் அ.வெங்கடேசன், துணை முதல்வர் K.T.தமிழ்மணி மற்றும் வணிகவியல் துறைத்தலைவர் முனைவர். T.காயத்ரி ஆகியோர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை கல்லூரி வளாகத்தில் நட்டனர்.
மேலும் பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணியும் நடத்தப்பட்டது. பேரணியை கல்லூரி தலைவர் பொறியாளர். பொன்.பாலசுப்ரமணியன் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வணிகவியல் துறை பேராசிரியர்கள் முனைவர் I.சுமதி, முனைவர் G.பாலசுப்ரமணியன், முனைவர் A.பிரபு மற்றும் திருமதி. S.துர்கா ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்வின்முடிவில் வணிகவியல் துறை மாணவ-மாணவியர்கள் மற்றும் பேராசிரியர்கள் இயற்கை வளங்களை பாதுகாக்கும் வகையில் “உறுதிமொழி” ஏற்றனர்.