• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

அழகப்பா பல்கலைக்கழகத்தில் உலகப் பாரம்பரிய வார விழா துவக்கம்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வரலாற்றுத்துறை மற்றும் இந்தியத் தொல்லியல் துறை, தமிழ்நாடு அரசு தொல்லியல் ஆய்வுத்துறை ஆகியன இணைந்து அழகப்பா பல்கலைக்கழகத்தில் உலகப் பாரம்பரிய வார விழாவின் தொடக்க விழா நடைபெற்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி மற்றும் கலாச்சார நிறுவனம் உலகம் முழுவதும் அதன் உறுப்பு நாடுகளில், நவம்பர் 19.11.2021 முதல் 25.11.2021 வரை உலகப் பாரம்பரிய வார விழா நடத்துவதற்கான அறிவிப்பினையொட்டி இந்தியாவின் பல மாநிலங்களில் இவ்விழா கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாட்டில் உலகப் பாரம்பரிய வார விழா கொண்டாட்டத்தில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறையும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது . ஏ.ஆர்.சரவணகுமார் தொடக்கவிழாவில் வரலாற்றுத்துறைத் தலைவர் பேரா அனைவரையும் வரவேற்றார் . அவர் தமது உரையில் மனித குலத்தின் வரலாற்றை எடுத்து இரும்பும் கண்ணாடியாக நமது முன்னோர்கள் வீட்டு சென்ற பாரம்பரிய சின்னங்கள் விளங்குகின்றன என்று குறிப்பிட்டார் . அரசர்களின் வரலாறு மட்டுமன்றி பொதுமக்களின் வரலாற்றையும் அனைவரும் அறிதல் வேண்டும் என்பதையும் குறிப்பிட்டார். இந்நிகழ்வின் கருப்பொருளை விளக்கிய வரலாற்றுத்துறை பேராசிரியர் சு.இராகவேலு அவர்கள் , உலக அளவில் 1155 உலகப் பாராம்பரிய சின்னங்களில் இந்தியாவில் மட்டும் 40 பாரம்பரியச் சின்னங்கள் தெரிவு செய்யப்பட்டு பட்டியலில் இடம்பெற்று உள்ளதையும், உலகின் மிகச் சிறிய நாடான இத்தாலியில் மட்டுமே அதிக அளவில் பாரம்பரியச் சின்னங்கள் உள்ளன என்றும் குறிப்பிட்டார்.

இந்தியா பழமையான நாகரிகத்தை கொண்டு அதிக அளவில் பாரம்பரியச் சின்னங்கள் உள்ள நாடாக இருப்பினும் இயற்கைச் சிற்றங்களினாலும், மக்களின் நடவடிக்கைகளாலும் பல பாரம்பரிய சின்னங்கள் அழிந்து விட்டன. அவற்றைப் பாதுகாக்கவும், பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த விழா கொண்டாடப்படுவதைக் குறிப்பிட்டார்.

இந்தியத் தொல்லியல் துறையைச் சேர்ந்த எம்.பிரசன்னா தனது உரையில் இந்தியாவில் இருக்கும் நினைவுச் சின்னங்கள் பற்றியும், கீழடி அகழாய்வு தமிழக மக்களிடம் புராதானச் சின்னங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது என்றும் குறிப்பிட்டார். அழகப்பா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் வாழ்த்துரை வழங்கிய பேரா.சி.சேகர் அவர்கள் வரலாறு படிமத்தின் நோக்கத்தை குறிப்பிட்டதுடன், அயல்நாடுகளில் மக்கள் தங்களது முன்னோர்களின் வரலாற்றைப் பெரிதும் அறிந்து கொள்வதில் அதிக ஈடுபாடு கொண்டுள்ளனர் என்றும், நாம் நம் குடும்ப வரலாற்றையே அறிய இயலாத நிலையில் உள்ளோம் என்பதையும் குறிப்பிட்டார். நமது நாட்டின் வரலாற்றை அனைவரும் அறிந்து கொள்வது அவசியம் என்றார் . தம் மொழி , இனம் மற்றும் பண்பாட்டுக் கூறுகளைப் பாதுகாப்பதில் ஜப்பானியர்கள் முன்னோடிகளாக திகழ்கின்றனர் என்றார் . அதைப்போல நாமும் செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார் .

அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்புக்குழு உறுப்பினர் பேரா. எஸ்.கருப்புச்சாமி அவர்கள் தமது தலைமையுரையில் குறிப்பிட்டதாவது : நமது பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் பாரம்பரியப் பெருமைகளையும் அனைவரும் தெரிந்துக் கொள்ளும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் மாணவர்களுக்கும் முக்கிய பங்கு உண்டு என்றார் . சீனா, ஜப்பான் மற்றும் வளர்ந்த பிற நாடுகள் அவர்களுடைய பண்பாட்டையும், பாரம்பரியக் கலாச்சாரத்தையும் பறைசாற்றும் அனைத்து இடங்களையும் மக்கள் கண்டுகளிப்பதற்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளன. இதைப் போலவே நமது நாட்டின் பாரம்பரியமிக்க இடங்களையும், வரலாற்றுச் சின்னங்களையும் கண்டுகளிப்பதற்கும் உலகளவில் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்கும் நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார் .

ஒரு நாட்டின் வலிமை என்பது அதன் பொருளாதார வளர்ச்சியில் மட்டுமல்ல அதனுடைய காலாச்சாரத்திலும், பண்பாட்டிலும் தான் அடங்கி உள்ளது எனத் தெரிவித்தார். கலைப்புல முதன்மையர் முனைவர் கே.ஆர்.முருகன் சிறப்புரை சிறப்புரை வழங்கினார் .

வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் முனைவர் ஜி.பரந்தாமன் நன்றியுரை ஆற்றினார். பாரம்பரிய சின்னங்களையும் கட்டுப்பாட்டிலுள்ள நினைவுச் சின்னங்களையும் இந்நிகழ்வின் ஒரு பகுதியாக இந்தியாவில் உள்ள தெரிவு செய்யப்பட்ட உலகப் மற்றும் இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறையின் சின்னங்களையும் பார்வையிடும் வகையில் அழகப்பா தொல்லியல் ஆய்வு துறையுடன் இணைந்து செய்துள்ளது . அத்துடன் அழகப்பா பல்கலைக்கழகத்தின் அகழாய்விற்கு உட்படுத்திய (காளையார்கோவில் உள்ள) இலந்தக்கரை அகழாய்வு அரும்பொருட்களும் பல் பட்டமளிப்பு அரங்கில் பொதுமக்களும் மாணவர்களும் பார்வையிடும் வகையி 25 ஆம் தேதி வரை வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .