மதுரை சுற்றுச்சாலை அவனியாபுரம் பகுதியில் அமைந்துள்ள அமிகா ஹோட்டலின் கிரீன் மதுரை (பசுமை மதுரை) இயக்கம் சார்பில் ஏழாவது ஆண்டு உலக பூமி தினம் கொண்டாடப்படுகிறது .
.

உலகம் நவீன மயமாக்குதல் எதிரொலியாக இயற்கையை அழித்து சுற்றுச்சூழலை மாசடைய செய்யும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகிறது.
அதனை தடுத்து உலகம் வெப்பமயமாக்கலை தடுக்கவும்,பசுமை சூழலை உருவாக்க மரக்கன்றுகள் நடவும்.
சுற்றுச்சூழலை மேம்படுத்த நெகிழி பயன்பாட்டிணை தவிர்த்து மண் வளம், புவி வளத்தை பாதுகாத்து இயற்கையை மேம்படுத்தவும் மரக்கன்றுகள் வழங்கிடும் நிகழ்வுடன் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மதுரை தெப்பக்குளம் பகுதியில் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி பேரணி மற்றும் மரக்கன்று வழங்கும் விழா நடைபெறுகிறது.
உலக பூமி தினம் விழிப்புணர்வு பேரணி நிகழ்சியினை மாநகர காவல் துணை ஆணையர் திரு. இனிகோ திவ்யன் துவக்கி வைத்து மரகன்றுகள் வழங்குகினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அமிகா ஓட்டல் பொது மேலாளர் பால் அதிசயராஜ், நிதிமேலாளர் அருண், பொறியாளர் சுரேஷ், தலைமை சமையல் கலைஞர் கோபி விருமாண்டி மற்றும் அமிகா ஹோட்டல் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
விழிப்புணர்வு பேரணியுடன் பொதுமக்களுக்கு 200 மரக்கன்றுகள் வழங்கினர்.