• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

வேன் மோதி விபத்து தொழிலாளி பலி..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் இருசக்கர வாகனம் மீது வேன் மோதி கட்டட தொழிலாளி பலி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரனை

இராஜபாளையம் அருகே தெற்கு வெங்கநல்லூர் சாவடி தெருவை சேர்ந்த அய்யனார் என்பவரது மகன் கணேசன் (45). இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் பெண் குழந்தை இருவரும் திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகின்றனர்.

கணேசன் கட்டட கொத்தனாராக பணி புரிந்து வந்தார். இந்நிலையில் தேசிகாபுரத்தில் வேலையை முடித்துவிட்டு தனது ஊருக்கு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது தெற்கு வெங்காநல்லூர் புது பாலம் அருகே வந்து கொண்டிருக்கும் பொழுது மில் தொழிலாளிகளை ஏற்றி வந்த வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தளவாய்புரம் காவல் நிலைய போலீஸார் சடலத்தை மீட்டு இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் வழக்கு பதிவு செய்து சிதம்பராபுரம் கிராமத்தைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் ராமர் (25 ) என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்‌.