கழிவுகளை செல்வமாக மாற்றுதல் மற்றும் குப்பைகள் இல்லாத நகரமாக வரும் காலத்தில் உருவாக்குவதை (குப்பை வங்கி) நோக்கமாகக் கொண்டுள்ளது.
தமிழ்நாட்டின் முதல் “ECO DROP” (குப்பை வங்கி) மையத்தை பெல் வில்லா அருகே ஒரு புதிய முயற்சியாக, ரோட்டரி கிளப் ஆஃப் சிவகாசி டயமண்ட்ஸ், தொடங்கியுள்ளது. இது கழிவுகளை மதிப்பாக மாற்றும். புதுமையான கருத்தாக்கத்தின் மூலம், சிவகாசியை குப்பை இல்லாத நகரமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த முயற்சியை, பயோனியர் குழும இயக்குநர் எஸ்.மகேஸ்வரன் முன்னிலையில், சிவகாசி எம்.எல்.ஏ., அரசன் அசோகன் தலைமையேற்று, இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் , மனிஷா டி.எஸ்.பி (சட்டம் & ஒழுங்கு), ரோட்டரி மாவட்டம் மற்றும் தலைவர் விஜயக்குமார், விருதுநகர் இதயம் குழுமத்தின் இயக்குனர் ராஜவள்ளி உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அனுபன்குளம் அரசுப் பள்ளியின் மாணவர்கள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளும் ஆர்வமுடன் பங்கேற்று, உறுதியான சமூக ஈடுபாட்டை வெளிப்படுத்தினர்.
தொலைநோக்கு திட்டமான இந்த முயற்சியைப் பற்றி எம். எல். ஏ. அரசன் அசோகன் தொலைநோக்குப் பார்வையை, சிவகாசி மாநகராட்சியின் 48 வார்டுகளையும், சுமார் 55,000 வீடுகளையும் கொண்டுள்ளது. “ECO DROP”திட்டம் மூலம், இந்த குடியிருப்பாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், அவர்களை இத் திட்டத்தை செயல்படுத்தும், “ECO DROP” உறுப்பினர்களாக பதிவு செய்ய ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும், தனித்தனியாக மென்பொருள் மூலம் டிஜிட்டல் சுயவிவர அட்டை வழங்கப்படும். அவர்கள் தங்கள் வீட்டுக் குப்பைகளை – பிளாஸ்டிக், காகிதம், கண்ணாடி மற்றும் உலோகம் போன்றவற்றை – பிரித்து, தொடர்ந்து (தினசரி அல்லது வாராந்திரம்) “ECO DROP” மையத்தில் வழங்க ஊக்குவிக்கப்படுவார்கள் என்றும்,
ஒவ்வொரு கிலோகிராம் சுத்தமான, பிரிக்கப்பட்ட கழிவுகளும் அவர்களின் பெயரில் வரவு வைக்கப்பட்டு, அவர்களின் சுயவிவர அட்டையில் உரிய அளவு மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களின் மதிப்புகள் பதிவேற்றப்படும். மொத்தமாக சேகரிக்கப்பட்ட மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களின் மதிப்பை சந்தை விலைகளின் அடிப்படையில் பணமாக்கப்பட்டு அவர்களுக்கு வழங்கும். அந்தப் பணத்தினைக் கொண்டு, மின்சாரம், செய்தித்தாள் மற்றும் டிவி கேபிள் கட்டணங்கள் போன்ற அத்தியாவசிய மாதாந்திர செலவுகளுக்கு செலுத்த மக்கள் பயன்படுத்தலாம், என்றும் எடுத்துக் கூறினார்.

சுற்றுச்சூழல் பொருளாதாரத்தை நோக்கி ஒரு படி உயர்த்துதல்:
“ECO DROP”மையம் – மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களுக்கான சுத்தமான சேகரிப்பு மையமாக செயல்படுகிறது. சேகரிக்கப்பட்ட கழிவுகள் மேலும் வரிசைப்படுத்தப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படும், இது சரியான சுழற்சி முறை மேலாண்மையை உறுதி செய்கிறது. இந்த முன்னோடித்திட்ட மாதிரியானது, மக்களுக்கு சிறிய நிதி வழங்குவதன் மூலம் சுற்றுச்சூழலை பேணுவதற்கு ஒரு இணைப்பு பாலமாக “ECO DROP” மையம் (குப்பை வங்கி) விளங்குவதோடு, சிவகாசியில் உள்ள ஒவ்வொரு வீட்டையும், ஒவ்வொரு தெருவையும் சுத்தமாக வைத்திருப்பதில் தீவிரமாக பங்கேற்க ஊக்குவிக்கிறது.
இந்த திட்டத்தை, சிவகாசி டயமண்ட்ஸ் ரோட்டரி கிளப்பின் தலைவர் காஞ்சனா தேவி மற்றும் செயலாளர் ரூபாவதி ஆகியோர் வழிநடத்துகின்றனர்.
எதிர்கால திட்டங்கள்:
ரோட்டரி கிளப் மூலம் இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பள்ளி மாணவர்களுடன் ஒத்துழைத்து, மாணவ தன்னார்வலர்களுடன் இயக்கங்களை உருவாக்கி வழிநடத்தவும், பயனுள்ள கழிவு மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை பற்றிய பொது விழிப்புணர்வை அதிகரிக்க, இந்த தளத்தைப் பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.
குடிமக்கள், சுகாதார அதிகாரிகள் மற்றும் சமூக அமைப்புகளின் ஒருங்கிணைந்த முயற்சிகளால், சிவகாசி ஒரு மாதிரி – குப்பை இல்லாத நகரமாக மாற உள்ளது.