• Sat. Apr 20th, 2024

இந்திய கடலோர காவல்படையில் வேலை

ByA.Tamilselvan

Jun 3, 2022
இந்திய கடலோர காவல்படை இந்தியாவின் கடல் வளங்களைப் பாதுகாக்கும் பொருட்டு இது உருவாக்கப்பட்டது. இதன் பணி கடல் வளங்களைப் பாதுகாப்பது, கப்பல்களைப் பாதுகாப்பது, கடல் வழிக் குடியேற்றத்தைக் கண்காணிப்பது, கடல்வழி போதைப்பொருட்கள் இந்தியாவிற்குள் வராமல் தடுப்பது ஆகியனவாகும்.

கடலோரக் காவல்படையானது இந்தியக் கடற்படை, மீன் வளத்துறை, வருவாய் மற்றும் குடியேற்றத்துறை, காவல்துறை போன்றவற்றுடன் ஒத்துழைத்து தன் பணியைச் செய்கிறது. இதில் காலியாக உள்ள பணிகளுக்கு தற்போது காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 9ம்தேதி கடைசி நாள் ஆகும்.தற்போது வெளியிடப்பட்டுள்ள காலிப்பணியிடங்களில் Motor Transport Fitter, Spray Painter, Motor Transport Mechanic என மூன்று விதமான வேலைகள் உள்ளன. சம்பள விவரம் Level 2 ஊதிய அளவின் படி, ரூ.19,900/- சம்பளம் வழங்கப்படும்.10 ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு பின் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ITI, Diploma படித்தவராக இருக்க வேண்டும்.இப்பபணிக்கு கூடுதல் தகுதிகளாக Automobile Workshop-ல் பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 02 வருடம் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். வயது குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27 வயது வரை விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள்.SC / ST பிரிவினருக்கு 05 ஆண்டுகள் மற்றும் OBC பிரிவினருக்கு 03 ஆண்டுகள் வயது தளர்வு. இப்பணிக்கு 07 காலியிடங்கள் உள்ளது. விண்ணப்பத் தாரர்கள் Written Test, Trade / Skill Test மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
இப்பணிகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பினைதெரிந்து கொள்ள
https://www.indiancoastguard.gov.in/WriteReadData/Orders/202205310527349841332AdvtMaterial-VY-21forCGwebsite-converted.pdf
இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து பூத்தி செய்தபின் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்
The decision of the Commander, Coast Guard Region (West), Worli Sea Face P.O. Worli Colony, Mumbai – 400 030
கடலோர காவல்படையின் அதிகாரபூர்வ இணையதள முகவரியை தெரிந்து கொள்ள
https://www.indiancoastguard.gov.in
இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *