-திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பேர்ட்ஸ் தொண்டு நிறுவனம் சார்பில் வேடசந்தூர்
மற்றும் சுற்றுப்புற கிராம பகுதி வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு பேர்ட்ஸ் தொண்டு நிறுவன தலைவர் முத்துசோனையம்மாள் வரவேற்று பேசினார்.

விழாவில் பேர்ட்ஸ் தொண்டு நிறுவனம் இயக்குனர் சின்னழகர் தலைமையேற்று வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள 25 மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்களை வழங்கி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் தனியார் வங்கி மேலாளர் விஜய், கூட்டுறவு வங்கி உதவி மேலாளர் ராஜா மற்றும் மகளிர் சுய உதவி குழு நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட ஏராளமானவர் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சத்யா மணிகண்டன் நன்றி கூறினார்.
——




